அமெரிக்கா: சுதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி, மாநிலங்களவை எம்பி, சிறந்த பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
சுதா மூர்த்தி மட்டுமல்ல அவரது குடும்பத்தினரை சேர்ந்த அனைவருமே பன்முகத்தன்மை கொண்டவராகவே இருக்கின்றனர். குறிப்பாக சுதா மூர்த்தி அவர்களின் சகோதரியின் கணவரான குருராஜ் தேஷ்பாண்டி முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு நெருக்கமானவர் என்றால் உங்களால் நம்ப முடியுமா.

தொழில் உலகில் குருராஜ் தேஷ்பாண்டேவை தெரியாதவர் இருக்க முடியாது. பல்வேறு நிறுவனங்களை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய திறமைசாலி இவர். இதுநாள் வரை 208 கோடி ரூபாயை நன்கொடையாக மட்டுமே வழங்கியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியை சேர்ந்தவர் குருராஜ் தேஷ்பாண்டே. சென்னை ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார். இதனைத் தொடர்ந்து மேற்படிப்புக்காக கனடாவுக்கு சென்றார்.
கனடாவில் பிஹெச்டி முடித்த குருராஜ் தேஷ்பாண்டே முதன்முதலில் மோட்டரோலாவின் துணை நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் கோரல் நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இணையவசதிக்கான இணைப்பு வழங்கும் ரௌட்டர்களை தயாரிக்கும் நிறுவனம் இது.
1993ஆம் ஆண்டு 15 மில்லியன் டாலர்களுக்கு இதனை விற்பனை செய்தார். பின்னர் கேஸ்கேடு கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி 1997இல் 3.7 பில்லியன் டாலர்களுக்கு அதனை விற்பனை செய்தார். இப்படி பல்வேறு நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி அவற்றை விற்பனை செய்வதில் வல்லவர்.
தற்போது இவர் ஏ123 சிஸ்டம் (A123Systems), சைக்காமர் நெட்வொர்க் (Sycamore Networks), தேஜாஸ் நெட்வொர்க் (Tejas Networks), சாண்ட் ஸ்டோன் கேப்பிட்டல் (Sandstone Capital) உளிட்ட நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இவர் அண்மையில் கூட தேஷ் பாண்டே தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் என்ற ஒரு மையத்தை நிறுவியுள்ளார். இந்த மையமானது கல்வி நிறுவனங்கள் புதுப்புது ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதற்குமான உதவிகளை செய்து வருகிறது.
சர்வதேச அளவில் முக்கியமான ஒரு தொழில் அதிபராக திகழ்கிறார் குருராஜ் தேஷ்பாண்டே. ஒரு தொழிலை எப்படி தொடங்க வேண்டும்?, அதை எப்படி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பன குறித்து கல்வி நிறுவனங்களிலும் , கருத்தரங்குகளிலும் இவர் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கமானவர் குருராஜ் தேஷ்பாண்டே. 2010 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவுக்கான தேசிய ஆலோசனை கவுன்சிலின் துணைத்தலைவராக செயல்பட்டு வந்தார். போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 400 பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார்.
story written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications