ஐேஆர்டி டாடாவுக்கு தனது இருபது வயதில் கடுங்கோபத்தில் எழுதிய கடிதத்தில் இருந்து நாட்டின் குடிமக்களுக்கான மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூஷன் பெறுவது வரை சுதா மூர்த்தியின் வாழ்க்கைப் பயணம் ஒவ்வொரு மனிதருக்கும் உண்மையிலேயே தேவையான ஒரு முன்னுதாரணமாகும்.
73 வயதான சுதா மூர்த்தி பிரபல எழுத்தாளர், கல்வியாளர், நன்கொடையாளர், இன்போசிஸ் பவுண்டேஷனின் முன்னாள் தலைவர், பத்ம விபூஷண் விருதுக்குரியவர் எனப் பன்முகப் பர்சனாலிட்டி ஆவார்.

1980களில் இன்போசிஸ் நிறுவனத்தில் தனது மனைவி சுதா மூர்த்தியை வேலைக்குச் சேர்க்காததற்காக அண்மையில் நாராயண மூர்த்தி பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சுதா மூர்த்தியின் வாழ்க்கைப்பயணம் அசாதாரணமான விஷயமாகும்.
டாடா குழுமத்தில் தொடங்கிய அவரது வாழ்க்கையானது இன்போசிஸ் பவுண்டேஷனை தொடங்கியது வரை அவரது உத்வேகம் அளிக்கும் வெற்றிகரமான பயணத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
சுதா மூர்த்தி, பி.வி.பி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பிஇ முடித்துள்ளார். படித்து முடித்த பின்னர் ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுநிலை பொறியியல் பட்டம் படித்தார்.
1974 ஆம் ஆண்டில் டாடா குரூப்பின் இளம் வயது மற்றும் நீண்டகாலத் தலைவரான ஜேஆர்டி டாடாவுக்கு ஒரு கோபமான கடிதம் எழுதினார். அப்போது அவர் பெங்களூரு டாடா இன்ஸ்டிட்டியூட்டில் எம்டெக் படித்துக் கொண்டிருந்தார். அவரது வகுப்பில் சுதா மட்டுமே ஒரே மாணவி. மற்றவர்கள் எல்லாம் மாணவர்கள்.
ஒருநாள் அவர் கல்லூரியில் இருந்து ஹாஸ்டலுக்குச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த நோட்டீஸ் போர்டில் டெல்கோ (TELCO), புனே எனப் பெயரிடப்பட்ட ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதில் டெல்கோ நிறுவனம் இளம் வயது, புத்திசாலித்தனமான இன்ஜினியர்கள் நல்ல சம்பளத்தில் வேலைக்கு எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நோட்டீஸின் கடைசி வரியில், மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது. இதைப் படித்தவுடன் சுதாவுக்கு கடும் கோபம் வந்துவிட்டது. விறுவிறுவென்று நேரே ஹாஸ்டல் அறைக்கு சென்ற சுதா ஒரு போஸ்ட் கார்டை எடுத்து ஜேஆர்டி டாடாவுக்கு கடிதம் எழுதினார்.
அவரது டெல்கோ நிறுவனத்தில் எப்படி ஆண் பெண் சரிசமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பது பற்றி விலாவாரியாக எழுதித் தள்ளிவிட்டார். பின்னர் ஜேஆர்டி டாடா தனது தவறை உணர்ந்து கொண்டார். அத்துடன் சுதாவின் கடிதத்தின் அடிப்படையில் தங்களது நிறுவனக் கொள்கையில் இருந்து ஆண் பெண் வேறுபாட்டை நீக்க உத்தரவிட்டார்.
டெல்கோவிலும் சுதா மூர்த்தி வேலை செய்தார். அங்கு அவர் டெவலப்மெண்ட் இன்ஜினியராக வேலைக்கு சேர்ந்தார். டாடா குரூப் வேலைக்கு எடுத்த முதல் பெண் இன்ஜினியர் ஆனார் சுதா மூர்த்தி.
இப்போது டாடா மோட்டார்ஸ் எனப்படும் டெல்கோவில் 1974 முதல் 1982 ஆம் ஆண்டுவரை சுதா மூர்த்தி பணியாற்றினார்.
டெல்கோவுக்குப் பின் அவர் புனேவில் உள்ள வால்சந்த் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸில் சீனியர் சிஸ்டம்ஸ் அனலிஸ்ட்டாக வேலைக்குச் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டில் இன்போசிஸ் பவுண்டேஷனைத் தொடங்கி அதன் தலைவராக 25 ஆண்டுகளாக பதவி வகித்தார்.
அந்தப் பதவியில் இருந்து சுதா மூர்த்தி ஓய்வு பெற்ற போது, இன்போசிஸ் பவுண்டேஷன் வாயிலாக பல அறப்பணிகளை கடந்த 25 ஆண்டுகளாகச் செய்ய முடிந்ததற்காக பவுண்டேஷனுக்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்த பவுண்டேஷன் எனது நாட்டின் நிலையைப் பற்றியும் சாமானிய மக்களின் தேவைகளைப் பற்றியும் உணரச் செய்து விட்டது என்றார்.
1981 இல், சுதா மூர்த்தி தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவ தனது கணவர் நாராயணமூர்த்திக்கு அடிப்படை மூலதனமாக 10,000 ரூபாய் கொடுத்தார். இது அவரது தனிப்பட்ட அவசரத்துக்கான சேமிப்பு நிதியிலிருந்து பணம் வந்தது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications