பானி பூரி-யால் பெரிய அக்கப்போர்..!! மும்பை விமான நிலையத்தில் அநியாயம்..!

இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்தமான சாட் ஐட்டத்தில் முக்கியமானது பானி பூரி, 10 ரூபாய்க்கே சாலையோர கடைகளில் கிடைப்பதால் மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது.

ஆனால் 10 ரூபாய்க்கு சாலையோர கடைகளில் விற்கப்படும் பானிப்பூரி விமான நிலையத்தில் எவ்வளவுக்கு விற்கப்படுகிறது என்று தெரிந்தால் நீங்கள் நிச்சயமாக அதிர்ச்சியடைவீர்கள்!

பானி பூரி-யால் பெரிய அக்கப்போர்..!! மும்பை விமான நிலையத்தில் அநியாயம்..!

எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதை விற்பனை செய்யும் இடம், பிராண்ட் அடிப்படையில் அதன் விலை மாறுபடும். அப்படி தான் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு தட்டு பானி பூரி ரூ.333க்கு விற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு டிரெண்டிங் ஆகி வருகிறது.

நாட்டின் பிரபல அழகு சாதன நிறுவனமான சுகர் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி கௌஷிக் முகர்ஜி, மும்பை விமான நிலையத்தில் பானி பூரி, தஹி பூரி மற்றும் சேவ் பூரி ஆகியவை ஒரு தட்டிற்கு ரூ.333க்கு விற்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும், இது குறித்து சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டார். அவர் பகிர்ந்த புகைப்படத்தில், ஒவ்வொரு தட்டிலும் 8 பூரிகளே இருந்தன, ஆனால் அதன் விலையோ 333 ரூபாய். அப்போ ஒரு பூரி 42 ரூபாய்க்கு கணக்கிடப்படுகிறது.

10- 15 ரூபாய்க்கு விற்கப்படும் பானி பூரி 333 ரூபாய்க்கு விற்க முக்கியமான காரணம் ரியல் எஸ்டேட் விலை தான். மும்பை விமான நிலையம் போன்ற நாட்டின் பெரும்பாலான விமான நிலையத்தில் இருக்கும் கடைகளுக்கு அதிகப்படியான வாடகை வசூலிக்கப்படுகிறது. இதன் தாக்கம் தான் பொருட்களின் விலையிலும், உணவின் விலையிலும் எதிரொலிக்கிறது.

"மும்பை விமான நிலையத்தில் உணவு கடைகளுக்குரிய இடம் மிகவும் அதிக விலைக்கு வாடகைக்கு விடப்படுகிறது என்பது புரிந்தது. ஆனால், இவ்வளவு அதிக விலைக்கு இருக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை" என்பதையும் கௌஷிக் முகர்ஜி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கௌஷிக் முகர்ஜியின் இந்த பதிவு இணையதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, 56,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சமூக வலைத்தள பயனர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் முக்கியமாக ஒரு டிவிட்டர்வாசி "இந்த 333 ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி வரியும் சேர்க்க வேண்டும்! பெரும்பாலும், விமான நிலையத்திற்குள் செல்வதற்கு முன்பே எனது தேநீர், காபி அல்லது சிற்றுண்டிகளை முடித்துக்கொள்வேன். குடும்பத்துடன் பயணம் செய்யும்போது, ஒரு வழி விமான கட்டணத்தை விட அதிகமாக உணவுக்கு செலவழிக்க வேண்டியிருக்கும். விமான நிலைய கடைகள் ஏன் பயணிகள் வருகையின் அடிப்படையில் விலையை நிர்ணயிக்க கூடாது?" என்று கௌஷிக் முகர்ஜி-யின் டீவிட்டில் கமெண்ட் செய்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மும்பை விமான நிலையத்தில் ஒரு மசால் தோசை எவ்வளவுக்கு விற்கப்படுகிறது என்பதைக் காண்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது மறக்க முடியாது. ஒரு மசால் தோசை மற்றும் ஒரு கிளாஸ் மோர் 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என கூறப்பட்டது, தற்போது பானி பூரி இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+