கோவை சுகுணா ஃபுட்ஸ்.. வெறும் ரூ.5,000 முதலிட்டில் உருவாகிய பிஸ்னஸ் சாம்ராஜ்ஜியம்..!

இன்றைய காலகட்டத்தில் பிசினஸில் ஒருவர் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளார் என்றால் அவர் கடந்து வந்த பாதைகள் என்பது கடினமானதாகதான் இருந்திருக்கும். அந்த வகையில், கோயம்புத்தூரின் சுகுணா ஃபுட்ஸ் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. 1984 ஆம் ஆண்டு சகோதரர்கள் பி சௌந்தரராஜன் மற்றும் ஜிபி சுந்தரராஜன் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் அவர்கள் பிறந்த இடத்திலிருந்து 72 கிமீ தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டையில் 5,000 ரூபாய் செலவில் வேரூன்றியது. தற்போது இந்த நிறுவனம் 12000 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டு, கோழி வளர்ப்பில் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் விவசாயத் துறையில் ஒப்பந்தப் முறையில் கோழி வளர்ப்பு முறையை அறிமுகம் செய்து முன்னோடியாக திகழ்கிறது.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த நிறுவனர்களான பி.சௌந்தரராஜன் மற்றும் ஜி.பி.சுந்தரராஜன் ஆகியோர் வேளாண் உணவுத் துறையில் சொந்தமாக பிஸ்னஸ் தொடங்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அதன்படி, 1984 இல், சகோதரர்கள் சுகுணா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். கோயம்புத்தூரில் உள்ள இந்த நிறுவனம் முதலில் வெறும் ரூ. 5000 முதலீடுகளில் நிறுவனம் கோழி குஞ்சுகள், கோழித் தீவனம், மருந்து மற்றும் தொடர்புடைய உபகரணங்களை அப்பகுதியில் உள்ள மற்ற கோழி நிறுவனங்களுக்கு வழங்கியது.

கோவை சுகுணா ஃபுட்ஸ்.. வெறும் ரூ.5,000 முதலிட்டில் உருவாகிய பிஸ்னஸ் சாம்ராஜ்ஜியம்..!

சுகுணா ஃபுட்ஸை அனைத்து கோழித் தேவைகளுக்கும் ஏற்ற நிறுவனமாகப் பார்த்த உள்ளூர் கோழி வளர்ப்பாளர்கள் மத்தியில் அவர்கள் தனக்கென ஒரு நற்பெயரைக் பெற மூன்று வருடங்கள் கடந்தன. சந்தையின் தேவை மற்றும் விநியோக இடைவெளி காரணமாக பணப்புழக்க நெருக்கடிக்கு வழிவகுக்கும் கோழிப்பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் சுருங்குவதை நிறுவனர்கள் அந்த நேரத்தில் கண்டது.

சௌந்தரராஜன் பள்ளிக்குப் பிறகு, அவர் குடும்ப அடிப்படையில் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டார், அதுவும் பலனளிக்கவில்லை. இருப்பினும், ஒவ்வொரு பின்னடைவும் ஒரு புதிய வாய்ப்பைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்த அவர், தனது உடன்பிறந்த சகோதரருடன் இணைந்து, இந்தியாவின் கோழிப்பண்ணையை தொடங்க முன்வந்தார்.

வர்த்தகத் தொழிலில் மூன்று ஆண்டுகள், சந்தையில் அதிக கடன் இடைவெளி இருப்பதால், பல விவசாயிகள் விவசாயத்தை கைவிடுவதை அவர்கள் உணர்ந்தனர். வங்கிகளில் கட்டமைக்கப்பட்ட கடன் பற்றாக்குறையால், இந்த விவசாயிகள் தனியார் கடன் வழங்குபவர்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது. மேலும், அவர்கள் நிலையற்ற வருமானத்தில் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

அப்போதுதான் ஒப்பந்த விவசாய மாதிரியை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் அவரது சகோதரர்களுக்கு ஏற்பட்டது. இது இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடம் சென்றனர். 1990 ஆம் ஆண்டில், சுகுணா ஃபுட்ஸ், வெறும் மூன்று பண்ணைகளுடன், ஒப்பந்தக் கோழி வளர்ப்பைத் தொடங்கியது. அதில் விவசாயிகளுக்கு குஞ்சுகளை வளர்ப்பதற்குத் தேவையான அனைத்தையும் வழங்கியது. தீவனம் முதல் மருந்துகள் வரை விவசாயிகள் கோழிகளை சுகுணா ஃபுட்ஸுக்கு வழங்கினர்.

அவர்களின் ஆரம்ப நாட்களில் உள்ளூர் விவசாய சமூகத்திற்கு கோழி தீவனத்தை வழங்குபவர்களாக அவர்களைக் கண்டனர். ஆனால் ஒப்பந்த அடிப்படையிலான கோழி வளர்ப்பில் சௌந்தரராஜனின் அற்புதமான அணுகுமுறைதான் அவர்களின் முயற்சியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த மாதிரியை 1990 இல் மூன்று உள்ளூர் விவசாயிகளுடன் அறிமுகப்படுத்தினர். 1997 ஆண்டுகளில் இந்த நெட்வொர்க் 40 விவசாயிகளுகாக வளர்ந்தது. அப்படியே இது விரைவில், 7 கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டியது. சுகுணா சிக்கன் இப்பகுதியில் பிரீமியம் கோழி வளர்ப்பின் அடையாளமாக மாறியது. 18 இந்திய மாநிலங்களில் உள்ள 15,000க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 40,000 விவசாயிகளுக்கு சுகுணா வருமானம் அளித்துள்ளது.

காலப்போக்கில், சுகுணா ஃபுட்ஸ் அதன் சலுகைகளை பன்முகப்படுத்தியது. பிராய்லர் வளர்ப்பு, குஞ்சு பொரிப்பகங்கள், உணவு உற்பத்தி அலகுகள் மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட விலங்கு பொருட்கள் வரை, நிறுவனம் கோழிப்பண்ணை களம் முழுவதும் அதன் இருப்பை வெளிப்படுத்தியது. தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் வணிகங்கள் ஆகிய இரண்டையும் அவர்கள் பிரபலமான பிராண்டுகளான டெல்ஃப்ரெஸ் மற்றும் மதர்ஸ் டிலைட் போன்றவற்றை சில்லறை வர்த்தகத்தில் அறிமுகப்படுத்தினர். ஒரே நேரத்தில், கார்ப்பரேட் அரங்கில், சுகுணா சிக்கன் மற்றும் சுகுணா ஃபுட்ஸ் வெளி கொண்டுவந்தனர்.

இன்று, இந்த மாதிரி மூலம், சுகுணா ஃபுட்ஸ் 40,000 விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை வழங்கி வருகிறது. முதன்மையாக அதன் தரமான கோழி மற்றும் தொடர்புடைய உணவுப் பொருட்களுக்கு பெயர் பெற்றது. இது நாடு முழுவதும் சுமார் 66 தீவன ஆலைகளையும் இயக்குகிறது. இந்நிறுவனம் ஆண்டுக்கு 8,700 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.

சுகுணா இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முழு தானியங்கு தீவன ஆலை கர்நாடகாவின் ஹோஸ்கோட்டில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொணுள்ளது. இந்தியாவில் கோழிப்பண்ணை சந்தைப் பங்கில் 18% சுகுணா கட்டுப்பாட்டில் உள்ளது. சுகுணாவின் ஏற்றுமதிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளை சென்றடைகின்றன. சுகுணா வங்காளதேசத்தில் கோழி வளர்ப்பு துணை நிறுவனத்தை அமைத்துள்ளார்.

சுகுணா குழுமத்தின் பயணம் ஒரு எழுச்சியூட்டும் கதை. ஒரு எளிய கோழி வர்த்தக நிறுவனமாகத் தொடங்கிய நிறுவனம், தற்போது ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல் கிராமப்புற சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு உலகளாவிய வேளாண்-உணவு கூட்டு நிறுவனமாக வளர்ந்துள்ளது.

சுகுணா ஃபுட்ஸின் பயணம் வளர்ந்து வரும் வணிக எண்ணங்களுக்கு விலைமதிப்பற்ற பாடங்களை வழங்குகிறது. இது விடாமுயற்சி, முன்னோடி மனப்பான்மை மற்றும் துன்பங்களுக்கு மத்தியில் பொன்னான வாய்ப்புகளைப் பெறுவதற்கான சான்றாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+