பெங்களூரு: பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழில் முனைவோர் தான் சுகாசினி சம்பத். அண்மையில் இவர் 1% கிளப் ஷோ என்ற பாட்காஸ்டில் பங்கேற்று பேசினார். நிதி ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கும் சுகாசினி சம்பத் இன்னமும் தான் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த பாட்கேஸ்டில் அவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சுகாசினி சம்பத் யோகா பார் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். இந்த நிறுவனம் அவருடைய சகோதரி அணிந்தாவுடன் 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பல்வேறு சத்து நிறைந்த சாக்லெட்டுகளை விற்பனை செய்யும் நிறுவனம் இது. இந்த நிறுவனம் ஐடிசி நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்தில் சுமார் 39 சதவீத பங்குகள் கடந்த ஆண்டு ஐடிசி நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐடிசி நிறுவனம் யோகா பார் நிறுவனத்தின் மொத்த உரிமத்தையும் பெற்றுக் கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 500 கோடி ஆகும். நிறுவன விற்பனை மூலம் இவ்வளவு பெரிய லாபத்தை பெற்று இருந்தும் இவர் இன்னமும் தொடர்ந்து வாடகை வீட்டிலேயே வசித்து வருகிறார்.
அவர் பெங்களூருவில் வாடகை குடியிருப்பில் இருப்பது பற்றி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பாட்காஸ்ட் தொகுப்பாளர் அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடே செய்யவில்லையா என கேள்வி எழுப்பினார். அதற்கு அவருக்கு சொந்தமாக 2 குடியிருப்புகள் இருந்தாலும் அவர் இன்னும் வாடகை வீட்டில் தான் வசிப்பதாக கூறுகிறார். அதன் மூலம் வரிச்சலுகைகள் கிடைக்கும், எனவே தான் அதை சொந்தமாக வைத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய சொத்து மதிப்பு இருந்தும் அவர் ஏன் வாடகை வீட்டிலேயே வசிக்கிறார் என்பது குறித்து பலரும் தங்களது கேள்விகளை முன் வைத்துள்ளனர். நீங்கள் இவ்வளவு பணம் வைத்திருந்தும் அதனை உங்களுக்காக செலவு செய்யாவிட்டால் அந்த பணத்தை சம்பாதிப்பதில் என்ன பலன் இருக்கிறது என ஒரு பயனாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர் மட்டுமல்ல இந்தியாவை சேர்ந்த பல்வேறு பெரும் பணக்கார தொழிலதிபர்களும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார்கள். ஸெரோதா நிறுவனத்தின் தலைவரும் மிகப்பெரிய பணக்காரனுமான நிகில் காமத் இன்னுமும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன் என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். அதேபோல பாம்பே சேவிங் நிறுவனத்தின் தலைவர் சாந்தனு தேஷ்பாண்டே கூட வாடகை வீட்டில் வசிப்பதாகவே கூறி இருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications