2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மற்றும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளில் அளிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தி அறிவித்ததுள்ளது.
ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2024 வரையிலான காலகட்டத்தில், குறிப்பிட்ட சிறுசேமிப்புத் திட்டங்கள் மற்றும் தபால் அலுவலகத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதாக டிசம்பர் 29 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சுகன்யா சம்ரிதி கணக்கிற்கான வட்டி விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும், தபால் நிலையத்தில் அளிக்கப்படும் 3 வருட வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து திட்டத்திலும் பழைய வட்டி விகிதம் தொடரும்.
இந்தியாவில் இருக்கும் அனைத்து தபால் நிலையத்தில் அளிக்கப்படும் முக்கிய நிதி சேவைகள் தான் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் தற்போது 3 வருட கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரிதி கணக்கு ஆகியவற்றின் வட்டி மட்டுமே உயர்ந்துள்ளது. மேலும் மாற்றப்பட்டு உள்ள வட்டி விகிதம் மார்ச் 31, 2024 வரை மட்டுமே.
சேமிப்பு கணக்கு - 4 வட்டி விகிதம்
1 வருட கால வைப்பு நிதி - 6.9 வட்டி விகிதம்
2 வருட கால வைப்பு நிதி - 7 வட்டி விகிதம்
3 வருட கால வைப்பு நிதி - 7.1 வட்டி விகிதம்
5 வருட கால வைப்பு நிதி - 7.5 வட்டி விகிதம்
5 ஆண்டு தொடர் வைப்பு நிதி - 6.7 வட்டி விகிதம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் - 8.2 வட்டி விகிதம்
மாதாந்திர வருமான கணக்குத் திட்டம் - 7.4 வட்டி விகிதம்
தேசிய சேமிப்புச் சான்றிதழ் - 7.7 வட்டி விகிதம்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் - 7.1 வட்டி விகிதம்
கிசான் விகாஸ் பத்திரா - 7.5 வட்டி விகிதம்
சுகன்யா சம்ரிதி கணக்கு - 8.2 வட்டி விகிதம்
இதில் சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால் பெரும்பாலான மக்கள் 0.2 சதவீத வட்டி உயர்வின் மூலம் பலன் அடைவார்கள். தபால் நிலைய 3 வருட கால வைப்பு நிதி திட்டத்திற்கு வெறும் 0.1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரும் வேளையில் மத்திய அரசு முக்கிய சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தப்பட்டு உள்ளது.
டிசம்பர் 27, 2023 நிலவரப்படி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஸ்பிஐயின் வைப்பு நிதி திட்டத்தின் மீதான வட்டி விகிதம் 3.5 சதவீதம் முதல் 7 சதவீதமாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் அதிகமாக வட்டி வருமான அளிக்கப்படுகிறது. இதாவது இதே காலகட்டத்திற்கு மூத்த குடிமக்கள் 4 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தைப் பெறுவார்கள்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications