பெண் குழந்தைகளுக்காக சேமிக்க வேண்டும் என்றால் பெற்றோர்களின் நினைவுக்கு முதலில் வருவது "சுகன்யா சம்ரித்தி யோஜனா" திட்டம் தான். போஸ்ட் ஆபீஸ்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டாலும்.. பெண் குழந்தைகளுக்கு என்று வரும்போது பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் தான் முதலீடு செய்கின்றனர். சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளை முறைப்படுத்த நிதித்துறை சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகள் கணக்கு திறப்பதில் உள்ள முரண்பாடுகளை சரி செய்வதற்காக கொண்டு வரப்படவுள்ளன.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறைகளில் முக்கியமான ஒன்று தாத்தா பாட்டிகளால் திறக்கப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளுக்குப் பொருந்தும். இந்த புதிய விதிகளின்படி சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர்கள் மட்டுமே SSY கணக்குகளைத் திறந்து நிர்வகிக்க முடியும். தாத்தா பாட்டிகளின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கு திறக்கப்பட்டிருந்தால் இந்த புதிய விதிகளுக்கு இணங்க வேண்டும்.

முன்பெல்லாம் தாத்தா பாட்டி தங்கள் பேத்திகளுக்கு SSY கணக்குகளைத் திறப்பது வழக்கமான நடைமுறையாக இருந்தது. ஆனால் தற்போது சட்டபூர்வ பாதுகாவலர் மற்றும் பெற்றோர் மட்டுமே இந்த கணக்குகளைத் திறந்து நிர்வகிக்க வேண்டும் என்று இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
தாத்தா பாட்டியின் கீழ் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரித்தி கணக்குகளை திறந்திருந்தால் அவர்கள் புதிய விதிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது? என்பதைப் பார்ப்போம். முதலில் SSY கணக்குகளைச் சட்டபூர்வ பாதுகாவலர் பெயரில் மாற்ற வேண்டும். இந்த ட்ரான்ஸ்ஃபர் ப்ராசஸை தொடங்குவதற்கு முன்பு ஒருவர் பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
SSY கணக்கு பாஸ் புக்: இதில் SSY கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும்.
பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்: இதில் குழந்தைக்கான வயது பற்றிய விவரங்கள் இருக்கும்.
பெண் குழந்தையுடனான உறவின் சான்று: அதாவது கணக்கு மாற்றப்படும் நபருடன் குழந்தைக்கு என்ன உறவு என்பதை எடுத்துக்காட்டும் ஆவணங்கள்.
புதிய பாதுகாவலரின் அடையாளச் சான்று: பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆவணங்கள் தேவைப்படலாம். இதற்கு அரசாங்க ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.
பல கணக்குகளை மூடுதல்: இந்தப் புதிய நடைமுறையின் மூலம் கூடுதலாக 2, 3 SSY கணக்குகளைத் திறப்பவர்களை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதாவது ஒரு பெண் குழந்தைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கணக்கு தொடங்கப்பட்டிருந்தால் கூடுதல் கணக்குகள் உடனடியாக மூடப்படும். அசல் தொகை எந்தவித வட்டியும் இன்றி திருப்பி செலுத்தப்படும். SSY வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு குடும்பத்திற்கு இரண்டு SSY கணக்குகளை மட்டுமே திறக்க முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications