பிரதமர் நரேந்திர மோடி, பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை சமாளிக்க பெற்றோர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் உதவி செய்யும் வகையில், 2015-ஆம் ஆண்டு சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் வட்டி விகிதத்தை ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலாண்டிற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் விவரங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
சுகன்யா சம்ரித்தி கணக்கு (SSA) என்றால் என்ன?: சுகன்யா சம்ரித்தி கணக்கு (SSA) என்பது ஒரு பெண் குழந்தையின் நலனுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறு சேமிப்புத் திட்டமாகும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் மற்றொரு பெயர் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பலருக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற பெயரை விட செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று சொன்னால்தான் புரியும். இவை இரண்டும் ஒரு திட்டத்தை தான் குறிக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெயரில் SSY கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய நீங்கள் அருகில் உள்ள வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ்களை அணுகலாம். குறைந்தபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 15 ஆண்டுகளுக்குப் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். SSY கணக்கு தொடங்கி 21 வருடங்கள் கழித்து அல்லது 18 வயதை அடைந்த பிறகு பெண் குழந்தை திருமணம் செய்து கொள்ளும் போது இந்தத் திட்டம் முதிர்ச்சியடையும்.
சுகன்யா சம்ரித்தி கணக்கிற்கான சமீபத்திய வட்டி விகிதம் என்ன?: இந்த திட்டம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான Q 1 காலாண்டில் 8.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்கியது. தற்போது Q 2 காலாண்டில், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் முந்தைய காலாண்டில் இருந்து மாறாமல் உள்ளது. அதாவது ஜூலை-செப்டம்பர் 2024 காலாண்டிற்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உள்ளது.
SSY கணக்கை யார் திறக்கலாம்?: கணக்கு தொடங்கும் தேதியின்படி 10 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு, அவர்களுடைய பாதுகாவலர் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் கூட்டுக் கணக்குகளைத் (Joint Account) திறக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒரு குடும்பத்தில் எத்தனை SSY கணக்குகளை திறக்க முடியும்?: SBI இணையதளத்தின்படி, இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கலாம்.
ஆனால், இரட்டையர்கள் அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால் விதிமுறை கொஞ்சம் மாறுபடுகிறது. அதாவது, இரட்டைக் குழந்தைகள் முதல் அல்லது இரண்டாவது பிறப்பில் பிறந்திருந்தாலும், அல்லது இரண்டிலும் பிறந்திருந்தாலும் கூட, கூடுதல் கணக்குகளைத் திறக்க முடியும். ஆனால், இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றை கேட்டு தெரிந்துகொண்டபின் முதலீடு செய்யலாம்.
சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கான வரிவிதிப்பு: SSY திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 80C இன் கீழ், முதலீட்டாளர் ஒரு நிதியாண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளைப் பெறலாம். முதிர்வுக்கான இறுதி கார்பஸ் மற்றும் இந்தத் திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
சுகன்யா சம்ரித்தி கணக்கை முன்கூட்டியே மூட முடியுமா?: SBI வலைத்தளத்தின் தகவல்படி, கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், தகுதி வாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தவுடன் கணக்கு உடனடியாக மூடப்படும்.
கணக்கில் உள்ள மீதத் தொகை, இறப்பு நாள் வரையிலான வட்டி சேர்த்து, பாதுகாவலருக்கு வழங்கப்படும்.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications