பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாப்பதற்கும்.. பிற்காலத்தில் அவர்களுக்கு தேவைப்படும் கல்விச் செலவுகளை சமாளிக்கவும் அரசு கொண்டு வந்த திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம். செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 2015 ஆம் ஆண்டின் ஜனவரி 22-ஆம் தேதி அன்று பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார். இன்றளவும் இந்தத் திட்டம் பெற்றோர்களுக்கு தங்கள் பெண் குழந்தையின் நிதி நலனை பாதுகாக்க முக்கிய பங்காற்றி வருகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றால் என்ன?: சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை என தொடர்ந்து 15 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு வட்டி வருமானமும் வழங்கப்படும். நீங்கள் கணக்கு தொடங்கியதில் இருந்து 21 ஆண்டுகள் வரை லாக்கின் காலம். இந்தக் காலகட்டத்திற்குள் உங்களால் தொகையை எடுக்க முடியாது.

ஆனால் 15 வருடங்கள் மட்டுமே முதலீடு செய்தால் போதுமானது. மீதம் இருக்கும் 6 ஆண்டுகளுக்கு எந்தவிதம் முதலீடும் இல்லாமல் வட்டி வருமானம் வழங்கப்படும். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டால் அந்த குழந்தைக்கு 21 வயது ஆகும்போது வட்டியும் அசலமாக பெற்றுக்கொள்ளலாம்.
சிறு சேமிப்பு திட்டங்களிலேயே அதிக வட்டி வழங்கப்படுவது இந்தத் திட்டத்திற்கு தான். தற்போது இதற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 5-வது நாள் முடிவிலிருந்து இறுதி வரையிலான காலகட்டத்தில் கணக்கில் உள்ள மிகக் குறைந்த பி பேலன்ஸின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது.
அதேப்போல இதற்கு வழங்கப்பட்ட வட்டி ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் கணக்கில் வரவு வைக்கப்படும். பெண் குழந்தைக்கு 18 வயதாகும் வரை கணக்கு பாதுகாவலர் அல்லது பெற்றோரால் நிர்வகிக்கப்படும். அதன் பிறகு அந்தந்த குழந்தைகளே கணக்கை நிர்வகிக்கலாம்.
எங்கு விண்ணப்பிப்பது?: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க போஸ்ட் ஆபீஸ்களுக்கு செல்லலாம். சென்று தேவையான ஆவணங்களை வழங்கி பணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்ச தொகை: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ. 1,50,000 வரை முதலீடு செய்யலாம்.
இதுவரையில் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு பலனளித்த நல்ல திட்டங்களில் இதுவும் ஒன்று. இன்றுடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து மக்களுக்கு அதிக வருமானத்தை வழங்கி வருகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications