டெல்லி: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர், அரசுக்கு தான் 7,640 கோடி ரூபாய் வரி செலுத்த தயாராக இருக்கிறேன் என கடிதம் எழுதியுள்ளார்.
தன்னுடைய வழக்கறிஞர் மூலம் சுகேஷ் சந்திரசேகர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய வருமான வரிச் சட்டத்தின் நடைமுறையின் கீழ் தான் 7,640 கோடி ரூபாய் வரி செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்த தகவல்களையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
சுகேஷ் சந்திரசேகர் தனக்கு சொந்தமாக எல்.எஸ். ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை அமெரிக்காவிலும், ஸ்பீடு கேமிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை பிரிட்டிஷ் விரிஜின் தீவுகளிலும் செயல்படுத்தி வருகிறார். இந்த நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கேமிங் மற்றும் பெட்டிங் பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றன.
2016 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் இவருக்கு 2.70 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டி தந்துள்ளது எனக் கூறியுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும் போது இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
அது தவிர அமெரிக்கா, ஸ்பெயின், துபாய், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் தனக்கு சொந்தமான நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருவதாக கூறியிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் , இந்த நிறுவனங்கள் சட்டத்துக்கு உட்பட்டு இயங்கி வருகின்றன என தெரிவித்துள்ளார். தன் பெயரில் நிலுவையில் இருக்கும் வருமான வரி சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் தீர்க்க நான் விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். இதற்காக 7640 கோடி ரூபாய் வரி செலுத்துவதற்கு தயாராக இருக்கிறேன் என சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
தான் ஒரு அரசு உயர் அதிகாரி என கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக 100-க்கும் மேற்பட்டோர் இடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்தது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் பிரமுகரிடம் 50 கோடி வரை ஏமாற்ற முயற்சி செய்தது என பல்வேறு மோசடி வழக்குகள் சுகேஷ் சந்திரசேகர் மீது இருக்கின்றன.
இவற்றின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் தன் மீதான வருமானவரித்துறை தொடர்பான வழக்குகளை முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் இவர் காதல் உறவில் இருப்பதாக அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. சிறையில் இருந்த படியே காதலிக்கு லட்சக்கணக்கில் பரிசுகளை வழங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications