நம் நாட்டில் கோடைக்காலம் தொடங்கும் போது மாம்பழ சீசனும் தொடங்கிவிடும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குறிப்பிட்ட மாம்பழ ரகம் பிரபலமாக இருக்கிறது.
மல்கோவா, அல்போன்சா என அனைத்து வகையான மாம்பழங்களும் அதன் ருசிகளுக்கு பேர் போனவை. அப்படி கோவாவில் மன்குராட் ரக மாம்பழம் பிரபலமானது. இப்போது அந்த மாம்பழத்திற்கு தான் மவுசு அதிகரித்துள்ளது.

மன்குராட் ரக மாம்பழத்திற்கு மவுசு: மாம்பழ சீஸன் இன்னும் தொடங்கவில்லை என்றாலும் கோவா நகர சந்தைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கிவிட்டன. அங்கு, மன்குராட் மாம்பழம் இப்போதே விற்பனைக்கு வந்திருப்பதால் மாம்பழ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இதன் விலை தான் அவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஒரு டஜன் மாம்பழம் ரூ.5000 க்கு விற்கப்படுகிறது.
ஏன் இவ்வளவு விலை?: குளிர்காலமே முடியாத நிலையில் மிக சொற்ப எண்ணிக்கையில் தான் மன்குராட் மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளன. அதே வேளையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு டிமாண்டும் அதிகமாக இருப்பதால் ஒரு டஜன் மாம்பழம் ரூ.5000 முதல் ரூ.7000 வரை விற்கப்படுகிறது என்கின்றனர் வியாபாரிகள்.
பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழங்கள் வரத்து அதிகரிக்கும் என்றும், படிப்படியாக விலை குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சீசன் தொடங்க ஒரு மாதம் முன்னதாகவே மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது விலை அதிகமாக இருந்தாலும் ஏப்ரல் மாதம் விலை சீரடைந்துவிடும் என பனாஜி நகர மாம்பழ வியாபாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் தற்போது கோவாவின் பிசோலிம் தாலுகாவில் இருந்து மட்டுமே மாம்பழங்கள் வர ஆரம்பித்துள்ளது, மற்ற பகுதியில் இருந்து பழங்கள் வர ஆரம்பித்துவிட்டால் விலை குறைய ஆரம்பித்துவிடும் என்றும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மன்குராட் மாம்பழங்களுக்கு ஏன் மவுசு?: மன்குராட் ரக மாம்பழங்கள் அதன் தனித்துவமான ருசிக்கு பெயர் போனவை. மேலும் அதிக சதைப்பற்று கொண்டவை. எனவே கோவாவில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் பெட்டி பெட்டியாக இந்த பழத்தை வாங்கி செல்கின்றனர்.
கடந்த ஆண்டு மன்குராட் ரக மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்தது. கோவாவில் போர்ச்சுகீசியர்கள் ஆதிக்கத்தின் போது இவ்வகை மாம்பழங்கள் சாகுபடி செய்வது தொடங்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications