கொண்டாட்டத்தில் சன் பார்மா.. காரணம் என்ன தெரியுமா?

டெல்லி : முன்னணி மருந்து நிறுவனமான சன் பார்மா கடந்த வியாழக்கிழமையன்று தனது இரண்டாவது காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன் படி இதன் நிகரலாபம் 1,064.09 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனம் 269.60 கோடி ரூபாய் நஷ்டம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை இந்த நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில்ல் தெரிவித்துள்ளது.

கொண்டாட்டத்தில் சன் பார்மா.. காரணம் என்ன தெரியுமா?

ஹெல்த்கேர் நிறுவனமான இதன் ஒருங்கிணைந்த விற்பனையானது 16.10 சதவிகிதம் அதிகரித்து, 7,949.19 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 6,846.48 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்தியாவில் ஒருங்கிணைந்த விற்பனையானது 31.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 35 சதவிகிதம் அதிகரித்து 2,515, கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் விற்பனை 20 சதவிகிதம் அதிகரித்து, 4,828 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இது வரை 12 புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்த வரைவில் மருத்துகள் சப்ளையில் முதலிடத்தில் இருக்கும் சன் பார்மா, நடப்பு ஆண்டில் சுமார் 8.2 சதவிகித சந்தை மதிப்பினை கொண்டுள்ளது.

இதே அமெரிக்காவில் இதன் மருந்து விற்பனையானது 424 மில்லியன் டாலராக உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை போலவே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதே மொத்த விற்பனையில் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த விற்பனையானது 30 சதவிகிதம் என்றும், இது நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 763 மில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 6 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதே வளர்ந்து வரும் சந்தைகளில் இதன் விற்பனை 201 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 சதவிகித வளர்ச்சியாகும். மற்ற நாடுகளில் விற்பனை 161 மில்லியன் டாலராகும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 49 சதவிகித வளர்ச்சியாகும்.

இதே இந்த நிறுவனத்தின் வரி, வட்டி, தேய்மானம் இவற்றிற்கு முந்தைய லாபம் 1,616 கோடி ரூபாயாகவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவிகிதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 3.50 சதவிகிதம் அதிகரித்து, 442.50 ரூபாயாக மும்பை பங்கு சந்தையில் முடிவடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+