பார்மா நிறுவனமான சன் பார்மா நிறுவனம், அகஸ்டா சாப்ட்வேர் பிரைவேட் (Agatsa Software) லிமிடெட் நிறுவனத்தின் 26.09% பங்குகளை, 30 கோடி ரூபாய்க்கு இரண்டு தவணைகளில் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் முதல் பரிவர்த்தனையில் 8 கோடி ரூபாயும், இரண்டாவது பரிவர்த்தனை மூலம் 22 கோடி ரூபாயும் பரிவர்த்தனை செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தமானது ஆகஸ்ட் 2023ல் முழுமையாக முடிவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அகஸ்டா நிறுவனம் 2022ம் நிதியாண்டில் 44 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ளது.
இதிலும் பங்கினை வாங்குகிறதா?
கண் நோய்களை முன்னதாக கண்டறியும் புதுமையான தயாரிப்புகளான, ரெமிடியோ இன்னோவேட்டிவ் சொல்யூசன்ஸ் (Remidio Innovative Solutions) நிறுவனத்தில், சன் பார்மா 27.39% பங்கினை வாங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமும் விரைவில் முடிவடையலாம் என அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் 26.6 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ளது. இந்த நிறுவனத்தினை 149.9 கோடி ரூபாய்க்கு வாங்கலாம் என தெரிகிறது.
வளர்ச்சி அதிகரிக்கும்
பார்மா நிறுவனத்தின் இந்த கையகல்படுத்தல்களானது தொடர்ந்து, சன் பார்மா நிறுவனத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் எனலா ம். இது அதன் நீண்டகால வளர்ச்சிக்கு துணை புரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த நிறுவனம் அமெரிக்க நிறுவனத்தினை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
லாபம்
மும்பையை தலைமையிடமாக கொண்ட சன் பார்மா நிறுவனம், கடந்த டிசம்பர் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகரலாபம் 2166 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் செயல்பாட்டு வருவாய் விகிதமானது 11,241 கோடி ரூபாயாக இருந்தது. இது இன்னும் ஆய்வில் உள்ளதாக கருதப்படுகிறது.
டிவிடெண்ட்
இதே இதன் எபிட்டா விகிதம் அல்லது வரி, வட்டி பிறகான லாபம் 3003.7 கோடி ரூபாயாக உள்ளது. இதே மார்ஜின் விகிதம் 26.7% ஆகவும் உள்ளது.
இந்த காலகட்டத்தில் சன்பார்மா நிறுவனம் டிவிடெண்டாக இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிதியாண்டின் இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது.
ரெக்கார்டு தேதி
இதே இடைக்கால டிவிடெண்ட் பிப்ரவரி 8, 2023 அன்று வரையில் பதிவாகியுள்ள பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரெக்கார்டு தேதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு விலை எப்படி?
சன் பார்மா நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இயில் 1.07% குறைந்து, 984.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 1.26% குறைந்து, 983.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே இதன் 52 வார உச்ச விலை 1071.90 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 539.45 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications