இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக சன் டிவி நெட்வொர்க் இருந்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களில் பல தொலைக்காட்சி சேனல்களைக் கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் சன் டிவி சேனல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல், விளையாட்டு அணிகளுக்கு முதலீடு செய்வதும், விளையாட்டுத் தொடர்பான நிகழ்ச்சிகளை ஆதரிப்பதன் மூலம் விளையாட்டு வளர்ச்சியிலும் சன் டிவி முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், சன் டிவி நெட்வொர்க் தற்போது 'The Hundred'வில் உள்ள Northern Superchargers அணியின் முழு பங்குகளையும் வாங்கியுள்ளது. 'தி ஹண்ட்ரெட்' என்பது இங்கிலாந்தில் 8 அணிகள் பங்கேற்கும் ஒரு பிரபலமான கிரிக்கெட் போட்டியாகும். இதில் விளையாடும் Northern Superchargers அணியை சன் டிவி முழுமையாக சொந்தமாக்கியுள்ளது.

இதற்கு முன்பு சன் டிவி நெட்வொர்க், இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டியில் சன்ரைஸ் ஹைதராபாத் அணியையும், தென் ஆப்பிரிக்கா SA20 லீக்கில் SunRisers Eastern Cape அணியும் வைத்துள்ளது. இந்த நிலையில் தான், தற்போது Northern Superchargers அணியையும் வாங்கியுள்ளது. இதன் மூலம் தனது விளையாட்டு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தி, உலக அளவில் தனது இடத்தை பதிவு செய்கிறது.
சுமார் 100.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஒரு புதிய ஒப்பந்தம் செய்ததன் மூலம் சன் டிவி இங்கிலாந்தின் விளையாட்டு சந்தையில் நுழைகிறது. சில செயல்முறைகள் முடிந்தவுடன், Northern Superchargers என்ற கிரிக்கெட் அணி முழுமையாக சன் டிவிக்கு சொந்தமாகும்.
இதுகுறித்து சன் டிவி நெட்வொர்க் கூறுகையில், "நாங்கள் உலகளாவிய அளவில் விளையாட்டுத் துறையில் முன்னேறி வருகிறோம். இங்கிலாந்து மற்றும் வெல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கிரிக்கெட் லீக் 'தி ஹண்ட்ரெட்'யில் ஒரு அணியில் முதலீடு செய்கிறோம். Northern Superchargers அணி ஏற்கனவே லாபகரமாக உள்ளது. உலகளாவிய ஆர்வம் அதிகரிப்பதன் மூலம் 'தி ஹண்ட்ரெட்' லீக் மேலும் பெரிய பொருளாதார வெற்றியை பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
Northern Superchargers அணி கடந்த 2019 மே 11ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு, 2024ஆம் நிதியாண்டில் 1.89 மில்லியன் பவுண்டுகளின் வருவாயை பதிவு செய்துள்ளது. இதற்கு முன், 2023 மற்றும் 2022 நிதியாண்டுகளில் தாங்கள் பெற்ற வருவாய்கள் முறையே 1.99 மில்லியன் மற்றும் 1.49 மில்லியன் பவுண்டுகளாக இருந்தன. இதற்கிடையே, இந்தியா மட்டுமின்றி, உலகளவில் கிரிக்கெட் விளையாட்டில் தன்னுடைய தாக்கத்தை அதிகரிக்க சன் டிவி நெட்வொர்க் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications