சன் டிவி நெட்வொர்க் நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் ஐபிஎல் மூலம் 175.55 கோடி ரூபாய் வருவாயினை கண்டுள்ளது.
சன் டிவி நெட்வொர்க் அதன் இந்தியன் பிரீமியர் லீக் உரிமையாளரான சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தினை ஒரு தனி நிறுவனமாக மாற்றுவதையும், அதன் மூலம் ஐபிஓ வெளியிட்டு அதன் மூலம் பங்குதாரர்களின் வருமானத்தையும் அதிகரிக்க விரும்பியதில்லை.
ஆனால் பங்குதாரர்களின் நலனுக்காக, அதன் திறனை மேம்படுத்தும் ஏதேனும் வழி இருந்தால் அதனை சரியான நேரத்தில் நிச்சயமாக பார்ப்போம் என சன் நெட்வொர்க் குழுமத்தில் சிஎஃப்ஓ எஸ் எல் நாராயணன் கூறியுள்ளார்.
சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத்
இது குறித்து இரண்டாவது காலாண்டு முடிவினை வெளியிட்ட போது இந்த நிறுவனம் நாராயணன் தெரிவித்துள்ளார். சன் ரைசர்ஸ் சன் நெட்வொர்க் லிமிட்டெட்டின் ஒரு பிரிவாகும்.
ஆக அதன் வருவாய் மற்றும் செலவுகளை நாங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிட்டு வருகிறோம்.
உரிமையாளர் கலாநிதி மாறன்
கடந்த 2012ம் ஆண்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நியமிக்கப்பட்டது, இந்த அணியின் உரிமையாளர் கலாநிதி மாறன் ஆவார். முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சன் ரைசர்ஸ் மூலம் 147 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என கூறும் நாரயணன், அதன் பின்னர் போடப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம் இழப்புகளை நாங்கள் மீட்டெடுத்தோம்.
புதிய ஒப்பந்தம் மூலம் லாபம்
அதன் பின்னர் ஒரு புதிய ஒப்பந்தம் மூலம் ஆறாவது ஆண்டில் அந்த இழப்புகள் அனைத்தையும் நாங்கள் மீட்டெடுத்தோம். அப்படி பார்க்கும்போது நாங்கள் தற்போது பூஜ்ஜிய முதலீட்டி ஒரு சொத்தினை உருவாக்கியுள்ளோம். தற்போது குழு சாதகமான பரிவர்த்தனைகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஐபிஎல் மூலம் வருவாய்
சன் டிவி நெட்வொர்க் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ஐபிஎல் மூலம் 175.55 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியுள்ளது. இதே கடந்த ஆண்டில் 117.04 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியிருந்தது.
ஐபிஎல் உரிமையாளர்கள் ஸ்பான்சர்ஷிப்கள், பரிசுத் தொகைகள், டிக்கெட் விற்பனை மற்றும் ஐபிஎல்லின் மத்திய ஒப்பந்த வருவாய் குழுவில் இருந்து உத்தரவாதமான 50 சதவீத வருவாய் பங்கினை பெறுகிறார்கள்.
வருவாய் சரிவு
டிக்கெட் விற்பனையானது சுமார் 27 - 28 கோடி ரூபாய் இருக்கும்.ஆநால் துரதிஷ்டவசமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டிலும் எங்களால் எந்த டிக்கெட் விற்பனையும் பெற முடியவில்லை. மேலும் கடந்த ஆண்டில் டைட்டில் ஸ்பான்சர்களாக விவோ மற்றும் ட்ரீம் 11 மாறியது. இதனால் பிசிசிஐ சம்பாதித்த ஸ்பான்சர்ஷிப் கட்டணம் கிட்டதட்ட 50% சரிவினைக் கண்டது. இதன் மூலம் இந்த அணியின் உரிமையாளர்களுக்கு விநியோகத்தை பாதித்தது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications