இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமும், தென்னியாந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் இன்று தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இந்நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 13.86% அதிகரித்து ரூ.456.24 கோடியாக உள்ளது, இது முந்தைய நிதியாண்டின் இதே செப்டம்பர் காலாண்டில் ரூ.400.71 கோடியாக இருந்தது குறிப்பிடித்தக்கது.

மேலும் செப்டம்பர் காலாண்டில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் EBITDA அளவு 524.78 கோடி ரூபாயில் இருந்து ரூ.716.21 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த வருடத்தைக் காட்டிலும் சுமார் EBITDA அளவில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சுமார் 36.48% வளர்ச்சியடைந்தது.
உள்நாட்டு வர்த்தகத்தில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் சப்ஸ்கிரிப்ஷன் வருவாய் 5.34% அதிகரித்து ரூ.418.23 கோடியாக உள்ளது. இதோடு அப்ரேட்டிங் ரெவென்யூ என அழைக்கப்படும் இயக்க வருவாய் 28% அதிகரித்து ரூ.1,017.98 கோடியாக உள்ளது.
இதன் மூலம் செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 27.48% அதிகரித்து ரூ.1,125.08 கோடியாக உள்ளது. மேலும் இக்காலாண்டு முடிவில் முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தும் நோக்கில் இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்குச் சுமார் 5 ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சன் டிவி நெட்வொர்க் ஆறு மொழிகளில் டிவி சேனல்களையும், சன் என்எக்ஸ்டி எனப்படும் OTT இயங்குதளத்தையும், இந்தியா முழுவதும் FM வானொலி நிலையங்களையும் கொண்டு மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்குகிறது.
இதைத் தாண்டி சன் டிவி நெட்வொர்க் இந்தியன் பிரீமியர் லீக்கில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், தென்னாப்பிரிக்க டுவென்டி 20 லீக்கில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் கொண்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க்-ன் நிறுவனர் மற்றும் உயர்மட்ட நிர்வாக அதிகாரியாக இருக்கும் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரிகள் பட்டியலில் உள்ளனர்.
2012 ஆம் நிதியாண்டில் கலாநிதி மாறன் 57 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்ற நிலையில் காவேரி கலாநிதி-யும் 57 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றார். இதேபோல் 2021 ஆம் நிதியாண்டில் 87.50 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளனர்.
1993ல் கலாநிதி மாறன் துவங்கிய சன் டிவி நெட்வொர்க் இன்று 33 டிவி சேனல்கள் உடன் தென்னிந்திய மீடியா உலகை அசத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் மாறன் குடும்பம் சுமார் 75 சதவீத பங்களை வைத்திருக்கும் வேளையில் நிறுவன முகலீட்டாளர்கள் 12 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications