கலாநிதி மாறன் Vs தயாநிதி மாறன்: சன் டிவி விவகாரம் முடிவுக்கு வந்ததா..? 5 பேர் நடத்திய முக்கிய கூட்டம்..!!

இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறனுக்கும், அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறனுக்கும் இடையே நீடித்து வந்த சன் டிவி தொடர்பான பங்கு தகராறு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் மத்தியிலான பிரச்சனை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடத்த குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் முடிவுக்கு வந்துள்ளதாக மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.

கலாநிதி மாறன் Vs தயாநிதி மாறன்: சன் டிவி விவகாரம் முடிவுக்கு வந்ததா? 5 பேர் நடத்திய முக்கிய கூட்டம்

சன் டிவி நிறுவனத்தில் 2003 ஆம் ஆண்டு நடந்த பங்கு ஒதுக்கீடு தொடர்பாக தயாநிதி மாறன் கடந்த மாதம் கடுமையான விமர்சனங்கள் உடன் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸ் சன் டிவி பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலாநிதி மாறன் சொத்து மதிப்பு:
சன் டிவி நெட்வொர்க்-ன் சந்தை மதிப்பு 22,500 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள மாபெரும் மீடியா சாம்ராஜ்ஜியம். இந்நிறுவனத்தின் தலைவரான கலாநிதி மாறன் தற்போது 75% பங்குகளை வைத்திருக்கிறார், மேலும் அவரது சொத்து மதிப்பு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

சன் டிவி பங்குகள் இன்றைய வர்த்தக முடிவில் 1.27 சதவீதம் சரிந்து 572.70 ரூபாயாக முடிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 8.52 சதவீதமும், 2025ல் 17.01 சதவீதம் சரிந்துள்ளது.

மாறன் சகோதரர்களின் பிரச்சனை:
2025 ஜூன் 10 அன்று, தயாநிதி மாறன், கலாநிதி மற்றும் அவரது மனைவி காவேரி உட்பட ஏழு பேருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பினார். இதில் 2003 ஆம் ஆண்டு 12 லட்சம் பங்குகளை ஒரு பங்குக்கு 10 ரூபாய் என்ற முக மதிப்பில் கலாநிதி மாறன் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டது "நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்று வேலை" என்று குற்றம் சாட்டினார்.

2003 காலக்கட்டத்தில் சன்டிவி பங்குகளின் உண்மையான மதிப்பு ஒரு பங்குக்கு 2,500 முதல் 3,000 ரூபாய் வரை இருந்ததாகவும், மேலும் இந்த பங்கு ஒதுக்கீடு முறையாக பங்குதாரர்களின் ஒப்புதல் இன்றி நடந்ததாகவும் தயாநிதி மாறன் தனது நோட்டீஸ்-ல் குற்றம் சாட்டினார். இந்த நடவடிக்கையின் மூலம் சன் டிவி குழுமத்தில் மாறன் மற்றும் மறைந்த மு.கருணாநிதியின் குடும்பங்களின் 50% பங்குகளை 20% ஆகக் குறைத்ததாகவும் அவர் கூறினார்.

சன் டிவி நிறுவனம் ஜூன் மாதம் இந்த பிரச்சனை வெடித்த போது, இந்த தகராறு ஒரு "குடும்ப விவகாரம்" என்றும், நிறுவனத்தின் செயல்பாடுகளை இது பாதிக்காது என்றும் தெரிவித்தது.

தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ்-ல் தற்போது இருக்கும் பங்கு இருப்பின் அளவை மாற்றி 2003ல் இருந்த படி மாறன் குடும்பம் மற்றும் கருணாநிதி குடும்பத்திற்கும் தலா 50 சதவீத பங்குகள் அளவீட்டை திரும்ப நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவித்திருந்தார் இருந்தார்.

மு.க. ஸ்டாலினின் தலையீடு:
மாறன் குடும்பத்திற்கும் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குடும்பத்திற்கும் நெங்கிய தொடர்புடையதாக இருப்பதால், மாறன் சகோதரர்களுக்கு மத்தியிலான பிரச்சனை அரசியல் மற்றும் வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

மாறன் சகோதரர்களின் தந்தை முரசொலி மாறன், இவர் மறைந்த மு.கருணாநிதியின் மருமகனாவார், மேலும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மாமன் ஆவார். இதனால் இரு குடும்பங்களும் மிகவும் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளது.

மாறன் சகோதரர்கள் மத்தியிலான பிரச்சனையை தீர்க்க, மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலையீட்டு பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளதாக மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில், மாறன் சகோதரர்களின் சகோதரி அன்புக்கரசி மாறனும் பங்கேற்றுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த 5 பேர் மத்தியிலான சந்திப்பின் மூலம் குடும்ப மோதல் தீர்க்கப்பட்டதாக மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது. ஆனால் எப்படி தீர்க்கப்பட்டது, பணம் பகிரப்பட்டதா அல்லது வர்த்தகம் பிரித்து தனியாக கொடுக்கப்பட்டதா என்பது தெளிவாகவில்லை.

சன் டிவியின் வணிகங்கள்
சன் டிவி நெட்வொர்க் கீழ் சுமார் 37 தொலைக்காட்சி சேனல்கள் உள்ளது. இது தவிர 69 ரேடியோ நிலையங்கள், மூன்று தினசரி செய்தித்தாள்கள் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு வணிகங்களை உள்ளடக்கிய ஒரு பெரும் மீடியா சாம்ராஜ்யமாக உள்ளது.

இதோடு இல்லாமல் சன் டைரெக்ட் டிவி, கல் ரேடியோஸ், கல் ஏர்வேஸ், சௌத்ஏசியன் எப்எம், சன் பிக்சர்ஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டனில் கிரிக்கெட் அணிகள், ஸ்பைஸ்ஜெட் என பல வர்த்தகங்கள் உள்ளது. கலாநிதி மாறன், இந்த நிறுவனத்தை 1993 இல் தொடங்கினார். இந்நிறுவனத்தின் 2024-25 நிதியாண்டு அறிக்கையின்படி, 4,544 கோடி ரூபாய் வருவாயையும், 1,654 கோடி ரூபாய் நிகர லாபத்தையும் பதிவு செய்துள்ளது.

பிற முக்கிய தகவல்:
2003 ஆம் ஆண்டு நடந்த 12 லட்சம் பங்கு ஒதுக்கீடுகள் முரசொலி மாறன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்த காலக்கட்டத்தில் நடந்தது. மேலும் இக்காலக்கட்டத்தில் சன் டிவி ஒரு தனியார் நிறுவனமாக இருந்து என்றும் இந்த பங்கு கைமாற்ரம் சட்டப்படி நடந்ததாகவும், 2006ல் நடந்த ஐபிஓ முன் தணிக்கை செய்யப்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+