சன் டிவி பங்குகள் நிலவரம் என்ன..? தொடர்ந்து முதலீடு செய்யலாமா..?

அமெரிக்கப் பணவியல் கொள்கை கடுமையாக்கப்பட்டது மூலம் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை இந்திய பங்கு சந்தையைத் தடுமாறச் செய்கிறது என்றால் மிகையில்லை.

நவம்பர் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சன் டிவியின் பங்குகளின் விலை 9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. சன் டிவி உட்படச் சுமார் 320 பங்குகள் பெரும் சரிவை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி நிறுவனத்தின் பங்குகள் ஏன் சரிந்தன? சன் டிவி பங்குகள் மீது முதலீடு செய்யலாமா..?

சன் டிவி

சன் டிவி

சன் டிவி நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததைத் தொடர்ந்து சன் டிவியின் பங்குகள் நவம்பர் 11 முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது. செப்டம்பர் 2022 காலாண்டின் வருவாய் அளவு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3 சதவீதம் சரிந்துள்ளது. இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் அதன் விளம்பர வர்த்தகம் குறைந்தது தான்.

எப்எம்சிஜி நிறுவனங்கள்

எப்எம்சிஜி நிறுவனங்கள்

இக்காலாண்டில் எப்எம்சிஜி நிறுவனங்கள் விளம்பர செலவினங்களைப் பெரிய அளவில் குறைத்த காரணத்தால் விளம்பர வருவாய் 3.4 பில்லியன் ரூபாயாக இருந்தது. ஒளிபரப்புத் துறையில் சுமார் 50-60% விளம்பரம் நுகர்வோர் துறையின் எப்எம்சிஜி நிறுவனங்கள் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்துவதால் இப்பிரிவு பாதிப்பு மூலம் வருவாய் பாதிக்கப்பட்டது.

வருவாய்

வருவாய்

சன் டிவி நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு வருவாய் குறைந்தாலும், அதன் அப்ரேட்டிங் மார்ஜின் 3 சதவீதம் அதிகரித்து 65.1 சதவீதமாக உள்ளது. இதேபோல் மொத்த லாபமும் கடந்த வருட செப்டம்பர் காலாண்டை விட 3 சதவீதம் அதிகமாகும். இக்காலாண்டில் நாட்டின் பிற முக்கியத் தொலைக்காட்சி நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய விதிகள்

புதிய விதிகள்

சந்தா மீதான ஒழுங்குமுறை தடை உட்பட, புதிய கட்டண முறை (NTO2.0) நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாகவே விலை நிர்ணய தடையால் சன் டிவி சந்தா வருவாய்ப் பாதிக்கப்பட்டது. இதேபோல் புதிய கட்டண முறை குறித்து முழுமையாக விளக்கம் இல்லாத காரணத்தால் சன் டிவி பங்குகள் குறித்து எதிர்காலம் தெளிவாக இல்லை என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சன் டிவி பங்குகள்

சன் டிவி பங்குகள்

சன் டிவி நிறுவன பங்குகள் விலை நவம்பர் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 9 சதவீதம் வரையில் சரிந்த நிலையில், இன்று 0.71 சதவீதம் உயர்ந்து 486.00 ரூபாயாக உள்ளது. வெள்ளிக்கிழமை சரிவில் இருந்து முழுமையாக மீண்டு வராவிட்டாலும் சன்டிவி பங்குகள் வளர்ச்சி பாதைக்குத் திரும்பியுள்ளது. கடந்த 5 நாட்களில் சன் டிவி பங்குகள் 2.42 சதவீதம் சரிவில் உள்ளது, 2022ல் 3.65 சதவீத சரிவில் உள்ளது.

சன் டிவி பங்குகள் எதிர்காலம்

சன் டிவி பங்குகள் எதிர்காலம்

புதிய கட்டண முறை குறித்து முழுமையாக விளக்கம் இல்லாதது, 2வது பாதி நிதியாண்டில் வர்த்தகச் சந்தை கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொள்ளும் என்ற கணிப்பு, FMCG நிறுவனத்தின் நிலைப்பாடு ஆகியவை சன்டிவி பங்குகள் அடுத்தச் சில வாரங்களுக்குத் தடுமாற்றத்தை எதிர் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது சன் டிவி நிறுவனத்தின் ப்ரோமோட்டர்-யிடம் 75 சதவீத பங்குகள் இருப்பது சாதகமாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+