தவறியும் இந்த பங்கினை இப்போதைக்கு வாங்காதீங்க.. சன் டிவிக்கு ஏன் இந்த நிலை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்போது முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். அந்த சமயத்தில் இண்டிரா டே வணிகர்கள் தொடர்ந்து நல்ல லாபம் பார்க்கலாம். மீடியம் டெர்ம் வணிகர்கள் தொடர்ந்து லாபம் பார்க்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் முதலீட்டாளர்கள், ஆர்டர்கள் அதிகளவில் எடுத்து விற்பனை செய்வார்கள். இதனால் குறிப்பிட்ட சில நல்ல பங்குகள் இந்த லிஸ்டில் இருக்கலாம்.

இந்த சமயத்தில் என். எஸ்.இ-யால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 95% ஒபன் இன்ட்ரஸ்ட் லிமிட்டினை தாண்டினால், அந்த பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யப்படும்.

 மீண்டு வருகிறதா கிரிப்டோ சந்தை: ஏற்றத்தை நோக்கி சில பிட்காயின்கள்! மீண்டு வருகிறதா கிரிப்டோ சந்தை: ஏற்றத்தை நோக்கி சில பிட்காயின்கள்!

ஓபன் இன்ட்ரஸ்ட்

ஓபன் இன்ட்ரஸ்ட்

ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய பங்குகள், மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும் போது வர்த்தகத்திற்கு திரும்பும். இன்று எஃப் &ஓ எக்ஸ்பெய்ரி என்ற நிலையில், தற்போது என்.எஸ்.இ-யில் சன் டிவி நெட்வொர்க் தடை செய்யப்பட்டுள்ளது.

அபராதம் விதிக்கலாம்

அபராதம் விதிக்கலாம்

இன்றைய பங்கு சந்தையின் எஃப் & ஓவில் தடை பட்டியலின் கீழ் தொடரும் ஒரே பங்கு சன் டிவி ஆகும். டெல்டா கார்ப் நிறுவனம் தடை பட்டியலில் வெளியேறியுள்ளது. இவ்வாறு எஃப் & ஒவில் தடை செய்யப்பட்ட பங்குகளை வாங்கினால் உங்களுக்கு ஆயிரக் கணக்கில் அபராதம் விதிக்கப்படலாம் என்பதால் இதனை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

எப்படி தெரிந்து கொள்ளலாம்?
 

எப்படி தெரிந்து கொள்ளலாம்?

எஃப் & ஓவில் தடை செய்யப்பட்ட பங்குகளை எப்படி தெரிந்து கொள்வது? எப்படி அபராதத்தில் இருந்து தப்பிப்பது வாருங்கள் பார்க்கலாம். இதனை https://www.niftytrader.in/ban-list என்ற என்.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

கவனமா இருங்க?

கவனமா இருங்க?

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த தடை பட்டியலில் இருந்து வெளியேறும் வரையில், கவனமாக இருப்பது நல்லது. இதில் தற்போதைக்கு புதிய ஆர்டர்கள் அனுமதிக்கப்படாது. எனினும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வர்த்தகத்திற்கு திரும்பலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sun TV under F&O ban on NSE today: Do you know why?

Sun TV has been banned from the F&O list as the open interest rate has crossed the 95% mark. The same Delta Corp has dropped out of this list.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X