அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும், டெஸ்லா சிஇஓ மற்றும் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க் ஆகிய இருவரும் விழா நடக்கும் வேளையில் மிகவும் சீரியஸாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வந்தது மட்டும் அல்லாமல் இருவரும் பேசி சிரித்துக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் கையில் என்ன ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள் என்பது தான் தற்போது வைரலாகி உள்ளது.
ஸ்மார்ட்போன் இன்று மனித உடலின் ஒரு அங்கமாக மாறிவிடும் அளவுக்கு மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வேளை சாப்பிடுகிறோமோ இல்லையோ ஆனால் ஸ்மார்ட்போன்களை நோண்டுவதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். சிலர் விடிய விடிய அந்த ஸ்மார்ட்போனில் உலவுகின்றனர். இதனால் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளையும் சம்பாதிக்கின்றனர். அதேபோல் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பல நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்தியாவில் ஆப்பிள், கூகுள், சாம்சங், விவோ, ஓப்போ, ஹானர், மோட்டோரோலா, ரியல்மீ, ஒன்பிளஸ், ரெட்மீ, போகோ, ஐகூஓஓ, இன்ஃபினிக்ஸ் உள்ளிட்ட ஏராளமான ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பாக, ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற போன்கள் இப்போது மக்கள் கையில் அதிகம் உள்ளது.
இந்தியாவில் தற்போது ப்ரீமியம் போன்கள் அதிகம் விற்கப்படுகிறது. விலை அதிகமானாலும் இவற்றை மாதத் தவணையிலாவது வாங்கி பயன்படுத்துபவர்கள் ஏராளம். அப்படியிருக்கையில், சில முக்கிய அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில் எலான் மஸ்க், சுந்தர் பிச்சை ஆகிய இருவரும் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதில் பிஸியாக இருந்த வேளையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், இணைய வாசிகள் இரண்டு டெக் சிஇஓ-க்களும் என்ன போன்களை பயன்படுத்துகிறார்கள்..?
எலான் மஸ்க் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோவைப் பயன்படுத்துகிறார். இது ஆப்பிளின் முதன்மையான ஸ்மார்ட்போன். ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்திய ரூபாயில் 1,19,900-க்கு விற்கப்படுகிறது.
அதேபோல், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆப்பிள் ஐபோனை பயன்படுத்துவதில்லை. அவர் தனது சொந்த நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார். Pixel ஸ்மார்ட்போனின் Google Pixel 9 XL ப்ரோ ஐ பயன்படுத்துகிறீர்கள். இது நிறுவனத்தின் முதன்மை சாதனமாகும். கூகுள் நிறுவனத்தின் AI ஜெமினி அசிஸ்டெண்ட் இந்த போனில் உள்ளது. மேலும் இந்த ஃபோன் பல AI அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயில் 1,39,999 ஆக விற்கப்படுகிறது.
சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சொந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் நிலையில், எலான் மஸ்க் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார். எலான் மஸ்க் விரைவில் சொந்த பிராண்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி அதை விளம்பரப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications