கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் வளர்ச்சி பலரையும் வியக்க வைப்பது போல, அவருடைய கல்லூரி சக தோழர்களும் இன்று கார்ப்ரேட் உலகில் கலக்கி வருகின்றனர். அப்படி ஒருவர் தான் மன்மத அம்பு விடும் குபிட்-க்கு சிஇஓ ஆக உள்ளார். யார் இவர்..?
இண்டர்நெட்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் இதுவரையில் யாரும் காணாத புகைப்படம் ஒன்று தற்போது நெட்டிசன்களால் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது. சுந்தர் பிச்சை இளமைப் பருவ போட்டோ என்றால் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஓரிரு போட்டக்கள் தான், ஒன்று டெலிபோன் பக்கத்தில் இருக்கும் போட்டோ, அதைத் தொடர்ந்து தனது தந்தை, தாய் உடன் இருந்த போட்டோ, மனைவி அஞ்சலி உடன் நியூயார்க் நகரில் எடுக்கப்பட்ட போட்டோ.

இதை தாண்டி சுந்தர் பிச்சையின் திருமண போட்டோ மிகவும் பிரபலம், இருவரும் கல்லூரி நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும். அப்படி கல்லூரி மாணவர்களாக, இருந்த நிலையில் ஐஐடி கல்லூரியில் படிக்கும் போது சுந்தர் பிச்சை பட்டம் பெற்ற போது எடுக்கப்பட்ட போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐஐடி கரக்பூர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நாளில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை, அதே கல்லூரியில் சுந்தர் பிச்சையுடன் படித்த பட்டதாரியின் மகளான அனன்யா லோஹனி என்பவர் X சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தில், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்களுடன் அவரது வகுப்பில் படித்த ஒரே பெண் மாணவி ஷர்மிஷ்டா துபே அவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டோ மூலம் சுந்தர் பிச்சை டிரெண்டானது மட்டும் அல்லாமல் ஷர்மிஷ்டா துபே -வும் டிரெண்டாகியுள்ளார்.
இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற பிரபல கார்ப்ரேட் தலைவர்களில் முக்கியமானவர் ஷர்மிஷ்டா துபே, Tinder மற்றும் OkCupid போன்ற பல்வேறு டேட்டிங் ஆப்களுக்கு உரிமையாளரான Match Group நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர்.
இந்த எக்ஸ் பதிவில் "எனது தந்தை தனது ஐஐடி கரக்பூர் பட்டமளிப்பு விழா (1993) புகைப்படத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அதில் சுந்தர் பிச்சை மற்றும் ஷர்மிஷ்டா துபே ஆகியோர் இருந்தனர். இது மிகவும் ஆச்சரியமான ஒன்று..." என்று டெல்லியைச் சேர்ந்த மென்பொறியியல் துறை பட்டதாரியான அனன்யா லோஹனி இப்புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் பலர் சுந்தர் பிச்சையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரை டேக் செய்துள்ளனர். இருப்பினும், கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி இந்த புகைப்படத்திற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
சுந்தர் பிச்சை மற்றும் ஷர்மிஷ்டா துபே இருவரும் ஐஐடி கரக்பூர் கல்லூரியில் உலோகவியல் துறையில் 1993 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்கள். சிலிகான் வேலியில் சுந்தர் பிச்சையின் அபரிமிதமான வளர்ச்சி, இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல், இப்புகைப்படத்தில் இருக்கும் ஷர்மிஷ்டா துபே, மார்ச் 2020 முதல் மே 2022 வரை Match Group நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டு டிண்டர் ஆப்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட 'லைக்ஸ் யூ' என்ற அம்சத்தை உருவாக்கிய பின்னணியில் இருந்தவரும் இவர் தான்.


Click it and Unblock the Notifications