மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்து இன்று உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமாக இருக்கும் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்திருக்கும் சுந்தர் பிச்சை கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய சவால்களையும், முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகிறார்.
உலகளவில் டெக் நிறுவனங்கள் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில் கூகுள் நிறுவனம் தனது வர்த்தகம், லாப அளவுகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் 12000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது, மட்டும் அல்லாமல் கூகுள் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சேவைகளை அதிரடியாக நீக்கியது.

கூகுள் நிர்வாகம் வரலாறு காணாத விதமாக பணிநீக்கம், செலவுகளை குறைக்கும் நடவடிக்கை எடுத்திருக்கும் வேளையில் சுந்தர் பிச்சையின் சம்பளத்தில் ஏற்பட்டு உள்ள மாற்றம் முக்கியமானதாக உள்ளது. ஏற்கனவே ஐரோப்பாவில் கூகுள் தனது டெக் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு ஒரு வருடம் சம்பளம் கொடுத்து ராஜினாமா செய்ய கேரிக்கை வைத்து வருகிறது.
இதோடு பல நாடுகளில் கூகுள் ஊழியர்கள் இனி ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என பிற ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள முக்கியமான கட்டத்தில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான சுந்தர் பிச்சை-யின் சம்பள அளவுகளை கூகுள் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது, இதில் சுந்தர் பிச்சை கடந்த ஒரு வருடத்திற்கு சுமார் 226 மில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1854 கோடி ரூபாய் அளவிலான தொகையை சம்பளமாக பெற உள்ளார். அமெரிக்க பங்குச்சந்தையில் கூகுள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையின் பிடி கூகுள் சுந்தர் பிச்சைக்கு பங்கு விதிப்புகள் உடன் 2022 ஆம் ஆண்டுக்கு 218 மில்லியன் டாலரை சம்பளமாக பெற்றுள்ளார். கடந்த 3 வருடமாக இவருடைய சம்பளம் 2 மில்லியன் டாலராக உள்ளது, இந்த வருடமும் இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. மீதமுள்ள 5 மில்லியன் டாலரை பாதுகாப்புக்காக பெறுகிறார். இதன் மூலம் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

சுந்தர் பிச்சை 2021ல் 6 மில்லியன் டாலரும், 2020ல் 7.4 மில்லியன் டாலரும் பெற்ற நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கு 226 மில்லியன் டாலர் என்பது மிகப்பெரிய உயர்வு. இதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு 3 வருடத்திற்கும் ஒரு முறை சுந்தர் பிச்சை பங்கு விதிப்புகளை பெறுவார், அந்த வகையில் இந்த வருடம் 7 மில்லியன் டாலர் உடன் 218 மில்லியன் டாலர் பங்குகளை பெற்றுள்ளார்.
2019ல் சுந்தர் பிச்சை சுமார் 281 மில்லியன் டாலர் அளவிலான சம்பளத்தை பெற்றார். 2022ல் ஆல்பபெட் பங்குகள் சுமார் 39 சதவீதம் சரிந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 19.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி சுந்தர் பிச்சையின் மொத்த சொத்து மதிப்பு 1310 மில்லியன் டாலர் அல்லது 1.31 பில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பின் படி 10,810 கோடி ரூபாய். சந்தர் பிச்சை அமெரிக்காவில் கலிப்போர்னியா மாகாணத்தின் முக்கிய பகுதியில் பிரம்மாண்டமான வீட்டில் தங்கியுள்ளார். சுந்தர் பிச்சையின் வீடு சுமார் 31.17 ஏக்கரில் அமைந்துள்ளது. முகேஷ் அம்பானியின் அண்டாலியா விட்டை காட்டிலும் பரப்பளவில் பெரியது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications