AI அசுர வளர்ச்சியால் உந்தப்பட்ட ஆல்பாபெட் (Alphabet) நிறுவனத்தின் வலுவான வருவாய், அதன் சந்தை மதிப்பு $1 டிரில்லியனைத் தாண்டியுள்ள நிலையில், கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சையை மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்ஏஐ போன்ற போட்டியாளர்களுக்கு எதிரான AI போட்டியில் தனது போட்டித்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ள, ஆல்பாபெட் நிறுவனம் மூலதனச் செலவினத்தில் (Capital Expenditure) குறிப்பிடத்தக்க அதிகரிப்பைத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தச் செலவு $85 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆல்பாபெட் பங்குகளின் சாதனை: புதன்கிழமை வெளியான ஆல்பாபெட் நிறுவனத்தின் வலுவான வருவாய் அறிக்கை, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறது. இது நிறுவனத்தின் மற்றொரு மைல்கல்லாக உள்ளது. இந்த காலகட்டத்தில் ஆல்பாபெட்டின் சந்தை மதிப்பில் $1 டிரில்லியனுக்கும் அதிகமான தொகை சேர்க்கப்பட்டுள்ளது.முதலீட்டாளர்களுக்கு 120%க்கும் மேலான வருமானத்தையும் இது வழங்கியுள்ளது.
இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சி, சுந்தர் பிச்சையை பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது. ஆல்பாபெட் பங்குகள் சாதனை உச்சத்தை நெருங்கி வருவதால், ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அவரது நிகர மதிப்பு இப்போது $1.1 பில்லியனாக உள்ளது. மேலும், ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலிலும் பிச்சையின் நிகர மதிப்பு $1.2 பில்லியனாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனர் அல்லாத தலைமை நிர்வாகியின் அரிய சாதனை: ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இல்லாத தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் பில்லியனர் ஆவது என்பது மிகவும் அரிதான சாதனையாகும். குறிப்பாக தொழில்நுட்பத் துறையில், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் என்விடியா கார்ப் நிறுவனத்தின் ஜென்சன் ஹுவாங் போன்ற பல உயர் நிர்வாகிகள் தங்கள் நிறுவனங்களில் வைத்துள்ள கணிசமான பங்குகளை வைத்திருப்பதன் மூலம் தங்கள் செல்வத்தைப் பெருக்கியுள்ளனர். இந்தச் சூழலில், சுந்தர் பிச்சையின் தற்போது தனித்து நிற்கிறார்.
நேற்று வியாழக்கிழமை சந்தைகள் திறந்த பிறகு ஆல்பாபெட் பங்குகள் 4.1% வரை உயர்ந்தன. இது இரண்டு மாதங்களில் கண்ட மிகப்பெரிய ஒருநாள் லாபமாகும்.
AI-யால் பிரகாசிக்கும் ஆல்பாபெட்: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் புதன்கிழமை அன்று காலாண்டு லாபம் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருந்ததாக அறிவித்தது. செயற்கை நுண்ணறிவு அதன் வணிகத்தின் ஒவ்வொரு பகுதியையும் சாதககமானதாக மாறியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
ஆல்பாபெட்டின் இரண்டாம் காலாண்டு லாபம் $28.2 பில்லியன் ஆகும். இது $96.4 பில்லியன் வருவாயில் கண்டுள்ளது. கிளவுட் சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய முதலீடு செய்வதால், இந்த ஆண்டு முன்னதாகத் திட்டமிட்டதை விட $10 பில்லியன் அதிகமாகச் செலவிடும் என்ற செய்தியை அடுத்து இந்த லாப அறிக்கை வெளிவந்துள்ளது.
இதற்கிடையில், சுந்தர் பிச்சை கூறுகையில், நிறுவனம் முழுவதும் வலுவான வளர்ச்சியுடன், நாங்கள் ஒரு தனித்துவமான காலாண்டைக் கொண்டிருந்தோம் என்று கூறினார். AI வணிகத்தின் ஒவ்வொரு பகுதியையும் சாதகமாக தெரிகிறது. இதனால் வலுவான முன்னேற்றம் ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அறிவிப்புகள், AI யுகத்தில் ஆல்பாபெட் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்பதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications