டெக் உலகின் ஜாம்பவானான கூகுள், உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கவனித்து, இந்திய சந்தையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார் சுந்தர் பிச்சை.
இந்தியாவில் டிஜிட்டல் சேவை, கிளவுட் சேவையில் கிங்மேக்கராக இருக்கும் கூகுள், அடுத்து கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் தனது வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதில் முதல் கட்டமாக இந்தியாவில் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள ஸ்மார்ட்போன் உற்பத்தி திறனை பயன்படுத்தி இந்தியாவில் ப்ரீமியம் போன்களை விற்பதோடு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்களை உலகம் முழுவதும் விற்க முடிவு செய்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்திற்குத் துணையாக இருப்பது தமிழ்நாடு தான்.
தமிழ்நாட்டில் பிக்சல் ஃபோன்களை தயாரிப்பதற்காக, பிரபல ஐபோன் உற்பத்தியாளர் Foxconn நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை, இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு எடை குறைவான, தானியங்கி டிரோன் டெலிவரி சேவையை வழங்கும் Wing LLC என்ற கூகுளின் துணை நிறுவனத்தின் மூலம் டிரோன்களையும் தமிழ்நாட்டில் தயாரிக்கத் கூகுள் திட்டமிட்டுள்ளது. Wing LLC என்பது ஆல்பபெட்-ன் கிளை நிறுவனமாகும், இது டிரோன் சேவைகளை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் பல அரசு அதிகாரிகள் உடன் சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில், கூகுள் நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த முயற்சியின் மூலம் உருவாக்கப்படும் முதலீட்டு அளவு, தொடக்கக் காலக்கெடு அல்லது வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும்
கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர் என்றும், இந்த பயணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு - கூகுள் - பாக்ஸ்கான் என மூன்று தரப்பு பேச்சுவார்த்தை உறுதியானால், சென்னையில் புதிய தொழிற்சாலை கூகுள் நிறுவனத்திற்காக உருவாக்கப்படலாம்.
மேலும் கடந்த வாரம் உள்நாட்டு உற்பத்தியாளரான Dixon நிறுவனத்துடன் பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்தும் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதுவரையில் கூகுள், தமிழ்நாடு அரசு, பாக்ஸ்கான், டிக்சான் நிறுவனங்களிடம் இருந்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
கூகுளின் பிக்சல் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்-க்கு பெரும் போட்டியாக விளங்குகிறது. உதாரணமாக ஜப்பான் ஐபோன்களுக்கு இணையாகக் கூகுள் பிக்சல் போன் விற்பனையாகி வருகிறது. ஆப்பிள் தனது சப்ளை செயினை விரிவாக்கம் செய்யவும், சீனாவின் நம்பியிருக்கும் நிலையை மாற்றவும் இந்தியாவில் தனது உற்பத்தியை பெரிய அளவில் அதிகரித்தது.
இந்த பார்மூலா பெரிய அளவில் உதவிய நிலையில் உள்ளூர் அளவில் தயாரிப்பதைத் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த முன்னேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆப்பிள் நிறுவனம் 2024 நிதியாண்டில் இந்தியாவில் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்களை உற்பத்தி செய்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் தனது ஐபோன்களில் மொத்த உற்பத்தியில் சுமார் 14 சதவீதம் அல்லது 7 இல் 1 ஐபோனை இந்தியாவில் தயாரிக்கிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications