கூகுள் நிறுவனம் தனது யுனிவர்சல் ஸ்பீச் மாடல் (USM - Universal Speech Model) பற்றி இதுவரையில் பெரிய அளவில் அறிவிக்காமல் இருந்த நிலையில் ChatGPT பிரபலமானதற்கு பின்பு கூடுதல் விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
Universal Speech Model சிஸ்டத்தில் தனது இலக்குகளை உணர்ந்து கொள்வதே முதல் படியாக கொண்டிருக்கிறது. தற்போது ChatGPT-ஐ தோற்கடிக்க 1000 வெவ்வேறு மொழிகளை சப்போர்ட் செய்யும் ஏஐ மொழியினை உருவாக்கும் இலக்கை நெருங்கி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு இன்றைய டிஜிட்டல் டெக் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூகுள் - மைக்ரோசாப்ட் மத்தியிலான போட்டி மிகப்பெரியதாக வெடித்துள்ளது.
1000 மொழிகள்
கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில், கூகுள் நிறுவனம் உலகில் அதிகம் பேசப்படும் 1000 மொழிகள் ஏற்கும் வகையில் ஒரு கட்டமைப்பை உருவாக்கும் திட்டம் பற்றி அறிவித்து இருந்தது. இதே அறிவிப்பின் போது, USM மாடல் பற்றிய தகவல்களையும் கூகுள் வழங்கியது.
ஸ்பீச் மாடல்
ஸ்பீச் மாடல்களில் 2 பில்லியன் வரைமுறைகளை சுமார் 12 மில்லியன் மணி நேரத்திற்கு பேச வைத்தும், 28 பில்லியன் வார்த்தைகள், 300-க்கும் அதிக மொழிகளில் சோதனை செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
யூடியூப்
யூடியூபில் பயன்படுத்தப்படும் USM தொழில்நுட்பம் தானியங்கி முறையில் ஆங்கிலம், மாண்டரின் மட்டுமின்றி அதிகம் அறிந்திராத Amharic, Cebuano, Assamese மற்றும் Azerbaijani போன்ற மொழிகளில் பேசப்படுவதை கண்டறிகிறது என கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
கூகுள் நம்பிக்கை
தற்போது USM 100-க்கும் அதிக மொழிகளை சப்போர்ட் செய்வதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து வருகிறது. இது மேலும் பெரிய சிஸ்டத்திற்கு அடித்தளமாக அமையும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது.
ஏஐ அம்சங்கள்
இதுதவிர, கூகுள் நிறுவனம் ஏராளமான ஏஐ அம்சங்களை தனது எதிர்கால பொருட்களில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். இவற்றில் ஆண்ட்ராய்டு தளத்திற்கான ஜிபோர்டில் டெக்ஸ்ட்-டு-இமேஜ் ஜெனரேட்டர் வசதி இடம்பெற்று இருக்கும்.
ஆங்கிலம்
உலகில் அனைத்து சேவைகளையும் ஆங்கிலத்தில் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் நிலையில், கூகுள் மட்டும் தனது அனைத்து சேவைகளையும், அனைத்து மொழிகளையும் அளிக்க வேண்டும் என விரும்புகிறது. கூகுளை பொருத்த வரையில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்துவம் இருப்பதாக நம்புகிறது.
சுந்தர் பிச்சை
இந்த நிலையில் ChatGPT ஆதிக்கத்தை உடைக்க கூகுள் தனது பானியிலேயே வெல்ல முடிவு செய்துள்ளது. 1000 மொழிகளை அடங்கிய யுனிவர்சல் ஸ்பீச் மாடலை உருவாக்கி ChatGPT-ஐ வெல்ல திட்டமிட்டு உள்ளார் சுந்தர் பிச்சை.


Click it and Unblock the Notifications