உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை-க்கு இன்று பிறந்த நாள். ஜூன் 10, 1972 ஆம் ஆண்டு பிறந்த சுந்தர் பிச்சை-க்கு இன்று 51 வயதாகிறது.
மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இரண்டு ஊரில் கழித்துள்ளார், ஒன்று சென்னை மற்றொன்று அமெரிக்காவில் லாஸ் ஆல்டோஸ். சுந்தர் பிச்சை அவர்களின் தந்தை 40 வருடத்திற்கு முன்பு சென்னையில் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய முதல் வீட்டை சமீபத்தில் விற்பனை செய்தது நாடு முழுவதும் பேசப்பட்டது.

அமெரிக்காவில் கடல் போல் வீட்டை வைத்துள்ள சுந்தர் பிச்சை சென்னையில் தான் பிறந்து வளர்ந்த வீடு பெரிய விஷயமாக இல்லை என்றாலும், அதிகப்படியான சென்டிமென்ட் வேல்யூ உள்ளது. ஆனாலும் சுந்தர் பிச்சை அமெரிக்காவில் லாஸ் ஆல்டோஸ் மலையில் பார்த்து பார்த்து தனது பிரம்மாண்டை வீட்டை கட்டியுள்ளார்.
சுந்தர் பிச்சை வீடு எந்த அளவுக்கு பெரியது என்பதை காட்ட ஒரு சிறு உதாரணம். இந்தியாவில் மிகவும் காஸ்ட்லியான வீடு என கூறப்படும் முகேஷ் அம்பானியின் ஆன்ட்லியா வீடு 400000 சதுரடியில் அமைந்துள்ளது, இதை ஏக்கர் அளவில் கணக்கிட்டால் 10 ஏக்கருக்கும் சற்று குறைவு.
ஆனால் சுந்தர் பிச்சை Los Altos மலை உச்சியில் சுமார் 31.17 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பர வீட்டில் வசித்து வருகிறார். சுமார் 40 மில்லியன் டாலருக்கு வாங்கிய சுந்தர் பிச்சை இந்த வீட்டுக்கு இன்டீரியர் டிசைனிங் செய்ய மட்டும் சுமார் 49 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்.
இந்த வீட்டில் இன்பினிட்டி ஸ்விம்மிங் பூல், ஜிம், ஸ்பா, வைன் செல்லார், சோலார் பேனல், லிப்ட், பணியாளர்களுக்கான தங்குமிடம் என சகல வசதிகளும் உண்டு. மலை உச்சியில் இந்த வீடு அமைந்துள்ளதால் ஒட்டுமொத்த வீடும் நகரின் அழகை பார்க்கும் வகையில் இன்டீரியர் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
இதேவேளையில் சுந்தர் பிச்சை-யின் செக்யூரிட்டிக்கு மட்டுமே கூகுள் நிர்வாகம் சுமார் 5 மில்லியன் டாலர் அளவிலான தொகையை செலவு செய்துள்ளது. இந்த பாதுகாப்பு அவருடைய வீட்டுக்கும் தான்.


Click it and Unblock the Notifications