அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவி ஏற்க இருக்கும் நிலையில் அவரது நிர்வாகத்தில் எலான் மஸ்க் ஆதிக்கம் செலுத்தும் நபராக இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தொலைபேசியில் அழைத்த போது டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும் அந்த அழைப்பில் இணைய டிரம்ப் அழைத்தது தெரியவந்துள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த முறை டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்.
எலான் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததோடு மட்டுமில்லாமல் அவருக்கு ஆதரவாக கோடிக்கணக்கான பணத்தையும் நன்கொடையாக வழங்கினார். இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் போது அவருடைய நிர்வாகத்தில் எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ட்ரம்பின் முக்கிய உரையாடல்களின் போதெல்லாம் எலான் மஸ்க்கும் உடன் இருப்பதாக ஒரு தகவல் பரவி வந்தது. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டாராம்.
அப்போது டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும் அந்த இணைப்பில் இணைந்து இருந்ததாக தி இன்பர்மேஷன் என்ற தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. எனவே டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமான நபராகவும் டொனால்ட் டிரம்பின் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தும் நபராகவும் எலான் மஸ்க் இருக்கப் போகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய அமைச்சரவையை தேர்வு செய்யும் போது கூட எலான் மஸ்கின் ஆதிக்கம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே சுந்தர் பிச்சை மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அமெரிக்காவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பாக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் எலான் மஸ்க் , டிரம்புக்கு ஆதரவாக இருந்தார். மற்ற டெக் நிறுவனங்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். கூகுள் தேடு பொறியில் தன்னை பற்றிய தவறான தகவல்களை மட்டுமே காட்டுவதாக டிரம்ப் புகார் கூறி வந்தார்.


Click it and Unblock the Notifications