இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி பல நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது, ப்ராடெக்ட் டெக் முதல் மெஷின் லேர்னிங், செயற்கை நுண்ணறிவு வரையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் டெக் திறன்களையும், டெக் ஊழியர்களையும் பயன்படுத்திக்கொள்ள இஸ்ரேலில் அலுவலகத்தை திறந்துள்ளது.
பல நிறுவனங்கள் கூட்டணி வாயிலாகவும், நிறுவனத்தை கைப்பற்றுவது வாயிலாகவும் வர்த்தகத்தையும், அலுவலகத்தையும் இஸ்ரேல் நாட்டில் பல MNC நிறுவனங்கள் விரிவாக்கம் செய்தது. இதில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகியவையும் அடங்கும்.

இந்த நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி சனிக்கிழமை காலையில் துவங்திய ஹமாஸ் அமைப்பின் தாக்குத்தல் மூலம் இஸ்ரேல் பதில் தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் தற்போது பெரும் பொருளாதார பிரச்சனையாக மாறியுள்ளது.
பல அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையில், இஸ்ரேல், பிரிட்டன் ஆகியவை இஸ்ரேல்-க்கு ஆதரவாக நிற்கிறது. இதனால் சர்வதேச முதலீட்டு சந்தையில் பதற்றமான நிலையை தொடர்ந்து நீடித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் ஆக்கிரமித்த காசா ஸ்டிரிப் பகுதியை மொத்தமாக கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்குமான தாக்குதல் துவங்கிய நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் இதுக்குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. இதன் படி கூகுள் நிர்வாகம் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் கூகுள் ஊழியர்கள், இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் செய்யும் கூகுள் ஊழியர் என அனைவரையும் தொடர்பு கொண்டு பாதுக்காப்பாக இருப்பதை உறுதி செய்யுள்ளோம், மேலும் அவர்களுக்காக முழு ஒத்துழைப்பு அளிக்கவும் தயாராக இருப்பதாக இந்த ஈமெயிலில் தெரிவித்தார் சுந்தர் பிச்சை.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்குமான பிரச்சனை குறித்து வருத்தம் தெரிவித்த சுந்தர் பிச்சை, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தான் நிர்வாகத்தின் முக்கிய பணி எனவும் தெரிவித்தார். கூகுள் இஸ்ரேல் நாட்டில் 2 அலுவலகத்தை Haifa, Tel Aviv பகுதியில் வைத்துள்ளது, இதில் சுமார் 2000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications