சென்னை டூ சான் பிரான்சிஸ்கோ பிளைட் டிக்கெட் கூட எடுக்க முடியாத மனுஷன்.. உலகையை ஆட்டிப்படைக்கிறார்!

சுந்தர் பிச்சை, தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பெயராக விளங்கும் ஒரு இந்திய-அமெரிக்க தொழிலதிபர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து, உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) உயர்ந்துள்ள இவர், தனது கடின உழைப்பால் உலகத்துக்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளார். ஒழுங்குமுறையுடன், புத்திசாலித்தனமாக, தொழில்நுட்பத்தில் ஆர்வத்துடன் செயல்படுபவராக, அவர் கூகிள் மற்றும் அதன் தலைமை நிறுவமான ஆல்பாபெட்டிற்குத் தலைமை வகிக்கிறார்.

சுந்தர் பிச்சை 1972 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரை நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ரெகுநாதன் பிச்சை, ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியில் (GEC) மின்பொறியாளராக பணியாற்றினார். அவரது தாயார் லட்சுமி ஒரு ஸ்டெனோகிராஃபராக (எழுத்து உளக்கி) பணியாற்றினார். சுந்தருக்கு ஸ்ரீனிவாசன் பிச்சை என்ற ஒரு தம்பி உள்ளார்.

சென்னை டூ சான் பிரான்சிஸ்கோ பிளைட் டிக்கெட் கூட எடுக்க முடியாத மனுஷன்.. உலகையை ஆட்டிப்படைக்கிறார்!

அவர் தனது குழந்தைப் பருவத்தைக் சென்னையில் கழித்தார். அவரது குடும்பம் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தது. சிறுவயதிலேயே கணிதத்தில் தனித்திறமை கொண்டிருந்த சுந்தர், தொலைபேசி எண்களை நினைவில் கொள்ளும் திறனில் சிறப்பாக இருந்தார்.

அவர் சென்னையில் உள்ள ஜவஹர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியிலும், பின்னர் ஐஐடி மெட்ராஸின் வனவாணி பள்ளியிலும் கல்வி பயின்றார். பள்ளியில் சிறந்த மாணவனாக இருந்ததால், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கரக்பூரில் உலோகவியல் பொறியியலில் (Metallurgical Engineering) இளங்கலை பட்டம் பெற்றார்.

அதன் பிறகு, மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்ற அவர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் மற்றும் பொறியியலில் மாஸ்டர்ஸ் பட்டம் (MS) பெற்றார். மேலும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் MBA பட்டம் பெற்றார்.

2004 ஆம் ஆண்டு, சுந்தர் பிச்சை கூகுளில் வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில் அவர் Google Toolbar மற்றும் Google Search வசதிகளை மேம்படுத்தும் பணி செய்தார். இதன் மூலம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Internet Explorer மற்றும் Mozilla Firefox வலை உலாவிகளில் கூகுள் தேடுபொறியை(Search engine) எளிதாக பயன்படுத்த வழிவகுத்தார்.

சில ஆண்டுகளுக்குள், கூகிள் தனது சொந்த வலை உலாவி(Browser) உருவாக்க வேண்டும் என்று அவர் நிறுவனர் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரை உறுதி செய்துக் கொண்டார். இதன் விளைவாக, 2008 ஆம் ஆண்டு Google Chrome அறிமுகமானது. இன்று, அது உலகின் மிக பிரபலமான இணைய உலாவியாக வளர்ந்துள்ளது.

கூகுளில் பணியாற்றிய பிறகு, பிச்சையின் வளர்ச்சி வேகமாக வளர்ந்துள்ளது, 2008 இல் தயாரிப்பு மேம்பாட்டுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.. 2012 இல் மூத்த துணைத் தலைவராக (Senior Vice President) பதவி உயர்வு பெற்றார். 2014 இல் கூகுளின் தயாரிப்பு தலைவர் (Product Chief) ஆனார். 2015 இல் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டார். 2019 இல் ஆல்ஃபாபெட்டின் (Alphabet Inc.) தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். மற்றும், 2013 ஆம் ஆண்டில், கூகுளின் Android பிரிவின் பொறுப்பை சுந்தர் பிச்சை ஏற்றுக்கொண்டார்.

அதன்பிறகு, மேலும் அவர் Chromebook கணினிகளுக்கான Chrome OS இயங்குதளத்தை உருவாக்குவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். 2014 ஆம் ஆண்டு, கூகிள் $3.2 பில்லியன் செலவில் Nest என்ற ஸ்மார்ட் ஹோம் நிறுவனத்தை வாங்கியபோது, அதற்கும் அவர் முக்கிய பங்களிப்பு செய்தார். 2015 ஆம் ஆண்டு, கூகுளின் நிறுவனர் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், கூகிளை புதுப்பித்துப் Alphabet Inc. என புதிய நிறுவனத்தை உருவாக்கினர். அப்போது, கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் அல்பாபெட்டின் நிர்வாக பதவிகளை விலகியதும், சுந்தர் பிச்சை முழுமையாக Google மற்றும் Alphabet நிறுவனங்களைப் பொறுப்பேற்றார்.

சுந்தர் பிச்சை தனது கல்லூரிப் படிப்பின் போது அஞ்சலி பிச்சையை சந்தித்தார். அஞ்சலியை IIT கரக்பூரில் படிக்கும் போது சுந்தர் பிச்சை சந்தித்தார். மேலும், அவர்களது நட்பு காதலாக மாறி, பின்னர் திருமணமாகியது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய ஒரு மனிதராக இருந்தாலும், சுந்தர் பிச்சை கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளை விரும்புகிறார். அவர் சிறுவயதில் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்தார்.

சுந்தர் பிச்சை, ஒருவரின் அறிவை வளர்ப்பதற்கும் புதிய விஷயங்களைத் தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறார். அவர் மிகவும் பணிவான மற்றும் அமைதியான நபராக அறியப்படுகிறார். பிச்சையின் வாழ்க்கை, சவால்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு, புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இத்தகைய, வெற்றிக்கான ரகசியம், கடின உழைப்பும், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் எண்ணமும் தான் என்ற சுந்தர் பிச்சையின் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு முன் உதாரணமாக அமைகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+