சுந்தர் பிச்சை மிகவும் சைலெண்ட் பார்ட்டி என்பது அனைவருக்கும் தெரியும், OpenAI அறிமுகமான போது கூகுள் நிறுவனத்தின் எதிர்காலம் முடிந்தது என அனைவரும் பேசி வந்த நிலையில், சுந்தர் பிச்சை தனது பணிகளை வேகப்படுத்தி பல முனைகளில் கூகுள் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க காரணமாகி டெக் சந்தையில் அதிர வைத்துள்ளார்.
கூகுள் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பம் மூலம் இயங்கும் சர்ச் சேவையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் மொத்த வர்த்தகமும் SEARCH சேவையை அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு இருக்கும் வேளையில் இதில் AI தொழில்நுட்பத்தை புகுத்துள்ளது சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிர்வாகம்.

AI Chatbot பிரிவில் கூகுள் ஏற்கனவே Bard சேவையை அறிமுகம் செய்திருக்கும் வேளையில், தற்போது படிப்படியாக அனைத்து சேவைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. கூகுள் இதற்காக தனி தளத்தை உருவாக்கியுள்ளது, இதன் பெயர் Search Generative Experience சருக்கமாக SGE என அழைக்கப்படுகிறது.
இந்த புதிய AI SEARCH சேவையில் ஒருவர் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தேட முடியும், இந்த சேவை தற்போது சோதனையாக அறிமுகம் செய்யப்படும் வேளையில் விரைவில் முழு சேவையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய SGE சேவையில் நாம் தேடுவதற்கான கேள்விகளையும், பதிலையும் வாய்ஸ் மூலம் அளிக்கவும் பெறவும் முடியும்.
கூகுள் நிறுவனத்தின் இந்த Search Generative Experience சேவை அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 4 மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது கிட்டத்தட்ட சாட்பாட் சேவை போன்றாகவே இருந்தாலும் AI சர்ச் இன்ஜின் மூலம் இயங்கி தீர்வுகளை வாய்ஸ் அவுட்புட் ஆக தருகிறது. முதல் கட்டமாக ஹிந்தி மொழி சேர்க்கப்பட்டு உள்ள விரைவில் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பிற மொழிகளும் சேர்க்கப்பட உள்ளது.
தற்போது Search Generative Experience சேவை விருப்பப்படுவோருக்கு மட்டுமே அளிக்கப்பட உள்ளதாக கூகுள் இந்தியாவின் சர்ச் பிரிவின் பொது மேலாளர் புனிஷ் குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications