இஸ்ரேல் WIZ நிறுவனத்தை அலேக்கா வாங்கும் Alphabet.. சுந்தர் பிச்சை-யின் மாஸ் திட்டம்..!!

உலகின் முன்னணி சர்ச் இன்ஜின் நிறுவனமான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Wiz என்ற சைபர் செக்யூரிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனத்தை சுமார் 23 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது மட்டும் அல்லாமல் இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால், ஆல்பபெட் நிறுவனத்தின் மிகப்பெரிய கைப்பற்றலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கான 23 பில்லியன் டாலர் தொகையை பெரும்பாலும் பணமாக வழங்கப்படும் என்றும், ஒப்பந்தம் விரைவில் முடிவடைய இருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் WIZ நிறுவனத்தை அலேக்கா வாங்கும் Alphabet.. சுந்தர் பிச்சை-யின் மாஸ் திட்டம்..!!

Wiz நிறுவனம் இஸ்ரேல் நாட்டில் தொடங்கப்பட்டாலும் தற்போது நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் இயங்கி வருகிறது. Wiz நிறுவனம், வேகமாக வளர்ந்து வரும் ஒரு சைபர் செக்யூரிட்டி நிறுவனமாகும்.

Wiz நிறுவனம் கிளவுட் அடிப்படையிலான சைபர் செக்யூரிட்டி சேவைகளை வழங்குகிறது. இந்த சேவைகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சைபர் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அவற்றிற்கு ரியல் டைம்-ல் தீர்வு காண உதவுகின்றன.

2023 ஆம் ஆண்டில், Wiz நிறுவனம் சுமார் 350 மில்லியன் டாலர் அளவிலான வருவாய் ஈட்டியுள்ளது, மேலும் ஃபார்ச்சூன் 100 நிறுவனங்களில் 40 சதவீத நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது என்பது கூகுள் நிறுவனம் வாங்குவதற்கு முக்கிய USP ஆக உள்ளது.

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கையகப்படுத்துதல் மூலம் வேகமாகவும், வலுவாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இது சந்தையில் போட்டித்தன்மையை இல்லாமல் செய்துவிடும் என்பதால் இதை தடுக்க கவனமாகக் கண்காணித்து வருவதால் இந்த ஒப்பந்தம் வெற்றி அடையுமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

Wiz நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் 900 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர், மேலும் 2024 ஆம் ஆண்டில் 400 புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஆல்பபெட் Hubspot என்ற ஆன்லைன் மார்கெட்டிங் நிறுவனத்தை வாங்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் கடைசி நேரத்தில் இந்த முயற்சியில் இருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Alphabet மட்டும் அல்லாமல் இந்த ஆண்டு துவக்கத்தில் Synopsys நிறுவனம் தனது சக போட்டி நிறுவனமான Ansys-ஐ சுமார் 35 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. இதேபோல் ஹெச்பி நிறுவனம் நெட்வொர்க் கருவிகளைத் தயாரிக்கும் Juniper Networks நிறுவனத்தை 14 பில்லியன் டாலர் என்ற பெரும் தொகைக்கு வாங்கியது.

2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் டெக் துறையில் சுமார் 327.2 பில்லியன் டாலர் மதிப்பிலான இணைப்பு மற்றும் கைப்பற்றல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான கைப்பற்றல் என்பது பெரிய டெக் நிறுவனங்கள் செய்வது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+