உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமான கூகிள்-இன் தலைவரான நம்ம ஊர் செல்லப்பிள்ளை சுந்தர் பிச்சை, பதவி உயர்வு பெற்று கூகிளின் நிறுவனர்களான லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோர் தலைமை வகித்த மாபெரும் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் இரு நிறுவனர்களும் தற்போது நேரடி நிர்வாகத்தில் இருந்து முழுமையாக வெளியேறி நிர்வாகக் குழுவில் மட்டும் இடம்பெற்று உள்ளனர்.
சுந்தர் பிச்சையின் இந்த வளர்ச்சி தமிழர்கள் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமைப்படும் விஷயமாக இருக்கும் நிலையில், சந்தர் பிச்சை கையில் கூகிள், ஆல்பபெட் அல்லாமல் சுமார் 7 நிறுவனங்கள் இவரின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.
கூகிள் பைபர்
கூகிள் நிறுவனத்தின் கீழ் க்ரோம், யூடியூப், தேடுதல், கருவிகள் எனப் பல விஷயங்கள் இருக்கிறது. இதேபோல் அமெரிக்காவில் பிராண்ட்பேன்ட் இண்டர்நெட் சேவைகளை வழங்கும் கூகிள் பைபர் என்கிற நிறுவனம் அல்பபெட் கீழ் இயங்குகிறது. தற்போது ஆல்பபெட் நிறுவனத்திற்குச் சுந்தர் பிச்சை தலைவரான நிலையில் கூகிள் பைபர் நிறுவனத்திற்கும் தலைவர் ஆகிறார்.
நெஸ்ட்
ஸ்மார் ஹோம் சேவைகளை வழங்கும் நெஸ்ட் நிறுவனத்தைக் கூகிள் 2014ஆம் ஆண்டுக் கைப்பற்றியது. 2018 வரையில் தனி நிறுவனமான இயங்கி வந்த நெஸ்ட் பின் நாளில் கூகிள் நிறுவனத்துடன் இணைந்தது. தற்போது இது கூகிள் நெஸ்ட் என்னும் பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கும் தற்போது சுந்தர் பிச்சை தலைவராகிறார்.
காலிகோ
ஆல்பபெட் கட்டுப்பாட்டில் இருக்கும் காலிகோ என்னும் நிறுவனம் பயோடெக்னாலஜி துறையில் சார்ந்து இயங்குகிறது. இந்நிறுவனம் வயது முதிர்வை எதிர்கொள்ள மிகப்பெரிய அளவிலான ஆராய்ச்சியைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கும் தற்போது சுந்தர் பிச்சை தலைவராகிறார்.
வெரிலீ
லைப் சயின்ஸ் துறையில் பல ஆராய்ச்சிகளைச் செய்யும் வெரிலீ லைப் சயின்ஸ் நிறுவனம் கூகிள் எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்கி வருகிறது. இந்தக் கூகிள் எக்ஸ் நிறுவனம் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. ஆல்பபெட் நிறுவனத்திற்குச் சுந்தர் பிச்சை தலைவர் ஆன நிலையில் வெரிலீ லைப் சயின்ஸ் நிறுவனத்திற்கும் அவர் தலைவர் ஆகிறார்.
கூகிள் வென்சர்ஸ்
கூகிள்-இன் வென்சர்ஸ் கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனமான கூகிள் வென்சர்ஸ் 2009ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட நிலையில் இதை லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோர் நிர்வாகம் செய்து வந்தனர். தற்போது இருவரும் நேரடி நிர்வாகத்தில் இருந்து வெளியேறிய நிலையில் இதற்கும் சுந்தர் பிச்சை தலைவர் ஆகிறார்.
எக்ஸ் டெவலப்மென்ட்
கூகிள் நிறுவனத்தின் ஆராய்ச்சி அமைப்பான கூகிள் எக்ஸ் எனக் கூறப்பட்ட எக்ஸ் டெவலப்மென்ட் நிறுவனத்தை லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோர் நிர்வாகம் செய்து வந்த நிலையில் தற்போது சுந்தர் பிச்சை தலைவர் ஆகிறார்.
கேப்பிடல் ஜி
டெக் ஸ்டார்ட்அப் நிறுவன பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்யும் ஒரு தனியார் நிறுவனம் கேப்பிடல் ஜி. இந்த நிறுவனமும் கூகிள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் இதைக் கூகிளின் நிறுவனங்கள் கவனித்து வந்த நிலையில் தற்போது சந்தர் பிச்சை தலைவர் ஆகிறார்.


Click it and Unblock the Notifications