டெக் துறையில் எங்கு திரும்பினாலும் பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் நிலையில் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிர்வாகம் எடுத்த முடிவால் முன்னணி ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் மற்றும் காக்னிசென்ட் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
கூகுள் நிறுவனம் துவங்கிய நாளில் இருந்து எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்து காலம் காலமாக ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு recreational சேவைகளை ரத்து செய்தது மட்டும் அல்லாமல் ஊழியர்களுக்கு நிரந்தர சீட்டுக்கூட அல்லாமல் சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிர்வாகம் செலவுகளை குறைக்கும் விதமாக யூடியூப் தளத்திற்கு பல்வேறு சேவைகளுக்கு சப்போர்ட் பிரிவில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்களை மொத்தமாக பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
கூகுள் அதன் ஒப்பந்ததாரர்கள் யூனியன் அமைக்கும் முடிவை எடுத்த உடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூகுள் நிர்வாகம் தற்போது எடுத்த முடிவில் அதிகப்படியான ஊழியர்கள் பாதிக்கப்பட்டது யூடியூப் டிவி மற்றும் யூடியூப் சோஷியல் மீடியா கணக்குகளை நிர்வாகம் செய்யும் ஊழியர்கள் தான்.
கூகுள் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்ட உடன் YouTube TV மற்றும் பிற யூடியூப் சேவைகளில் பணியாற்றி வந்த Accenture, Cognizant ஊழியர்கள் பணிநீக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

காக்னிசென்ட் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் யூடியூப் சேவைகளில் பணியாற்றியவர்களுக்கு மே 31 முதல் ஜூலை 31 ஆம் தேதிக்குள் இறுதி பணி நாள் அறிவிக்கப்பட்டு உள்ளது. காக்னிசென்ட் நிறுவனத்தில் கூகுள் மூலம் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது இதுவரையில் வெளியாகவில்லை.
இதேவேலையில் அக்சென்சர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் கீழ் கூகுள் மியூசிக் பிரிவில் பணியாற்றிய 120 முதல் 150 ஊழியர்கள் தங்களது பணியை இழந்துள்ளனர். இந்த பணிநீக்கம் அனைத்தும் இவ்விரு நிறுவனங்களின் ஒப்பந்த ஊழியர்கள் Alphabet Workers Union-ல் சேர்ந்த பின்பு பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது முக்கியமான விஷயம்.


Click it and Unblock the Notifications