IPL இறுதி போட்டியில் சிஎஸ்கே அசத்தலான வெற்றியை கடைசி பந்தில் பதிவு செய்த நிலையில், உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நெயில் பைட்டிங் மேட்ச் ஆக அமைந்தது. மழையின் காரணமாக இரவு 2 மணி வரையில் மேட்ச் நடந்தாலும், ஸ்டேடியத்தை விட்டு ரசிகர்கள் யாரும் நகரவில்லை.
இந்த மாபெரும் வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் வகையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சிஎஸ்கே வெற்றியை அழகாக ஒரு டிவீட்டில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். டாடா ஐபிஎல் இறுதி போட்டியில் மழை மூலம் 2வது நாள் ஒத்திவைத்தது மட்டும் அல்லாமல் 2வது நாளில் மழை வாயிலாக 2 மணிநேரம் தாமதமானது. ஆனாலும் கடைசி வரையில் மேட்ச் விறுவிறுப்பாக இருந்தது.

இந்தியா முழுக்க இந்த போட்டிக்காக குஜராத் சென்ற சிஎஸ்கே ரசிகர்களுக்கு ரவீந்தர ஜடேஜா-வின் கடைசி சிக்ஸ் மற்றும் போர் விருந்தாக அமைந்தது. மழை காரணமாக அடுத்த நாளுக்கு மேட்ச் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பல சிஎஸ்கே ரசிகர்கள் ரயில் நிலையம், விமான நிலையத்தில் தூங்கினர். இந்த நிலையில் சிஎஸ்கே வெற்றி அனைவருக்கும் மன நிறைவை கொடுத்தது.
இந்த சூழ்நிலையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிஇஓ சுந்தர் பிச்சை தனது டிவிட்டர் கணக்கில், இதுதான்டா பைனல் என்பது போல் டிவீட் செய்து அசத்தியுள்ளார். வழக்கம் போல் டாடா ஐபிஎல் கிரேட், சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துக்கள், குஜராத் டைட்டன்ஸ் அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வரும் என டிவீட் செய்துள்ளார்.
மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்த சுந்தர் பிச்சை தீவிரமான கிரிக்கெட் ரசிகர், ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து பார்ப்பவர். ஒய்வு நேரத்தில் தன்னுடைய மிகப்பெரிய பொழுதுபோக்கே கிரிக்கெட் மற்றும் புட்பால் தான் என ஒரு கல்லூரி இண்டர்வியூவ்-ல் தெரிவித்தார். இதை உறுதி செய்யும் வகையில் சுந்தர் பிச்சை தனது டிவிட்டரில் சிஎஸ்கே வெற்றியை பகிர்ந்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக கூகுள், டிவிட்டர் ஆகியவற்றில் அதிகம் தேடப்பட்ட ஒரு விஷயம் IPL, சிஎஸ்கே ஆகியவை தான். ஜியோ சினிமா தளத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 3.2 கோடி பேர் ஒரே நேரத்தில் அதிகப்படியாக பார்த்தனர். இது இந்திய ஸ்ட்ரீமிங் வர்த்தகத்தில் வரலாற்று சாதனையாகும்.


Click it and Unblock the Notifications