நீங்கள் Google இன் CEO ஆக இருந்தால், தினமும் காலையில் எழுந்த உடன் நீங்கள் பார்க்கும் முதல் இணையதளம் எதுவாக இருக்கும்? நியாயப்படியாக இல்லாவிட்டாலும், சிஇஓ என்ற முறையில் கட்டாயம் கூகுள் தளத்தைத் தான் பார்க்க வேண்டும்.
ஆனால் சுந்தர் பிச்சை அப்படி இல்லையாம்! கேட்கவே ஷாக்காக இருக்குல்ல. உண்மையில் கூகுள் சிஇஓ தான் தினமும் காலையில் எந்த இணையதளத்திற்குச் செல்கிறார் என்பதைச் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவரே வெளியிட்டார்.

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியும், மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்த தமிழருமான சுந்தர் பிச்சை தினமும் காலையில் எழுந்த உடன், தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் செய்தி ஆர்வலர்கள் இருவருக்கும் விருப்பமான ஒரு சிறப்பு இணையதளத்தைப் படிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த இணையதளத்தின் பெயர் Techmeme என்று அமெரிக்கப் பத்திரிகையான வயர்டுக்குச் சமீபத்தில் அளித்த பேட்டியில் சுந்தர் பிச்சை தெரிவித்தார். Techmeme என்பது ப்ளூம்பெர்க், சிஎன்பிசி, தி வெர்ஜ் மற்றும் தொழில்நுட்பத் துறையை உள்ளடக்கிய பிற ஊடகங்களால் வெளியிடப்பட்ட சமீபத்திய தொழில்நுட்பச் செய்திகளுக்கான ஒருங்கிணைக்கும் இணையதளமாகும்.
பல இணையத் தளத்திற்குச் சென்று செய்திகளைப் பிடிப்பதை தாண்டி ஓரே தளத்தில் அனைத்து முக்கியமான செய்திகளையும் படிக்கும் தளமாக இருக்கிறது இந்த Techmeme. உதாரணமாக இந்தியாவில் Dailyhunt தளத்தில் நாட்டின் அனைத்து செய்திகளையும் ஓரே இடத்தில் படிக்க முடியும் அதேபோல் டெக் செய்திகளைப் படிக்கக் கூடிய தளமாக Techmeme உள்ளது.
கபே ரிவேரா என்பவர் 2005 இல் Techmeme தளத்தை நிறுவினார், இது மிகவும் குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சி குறித்த செய்திகளையும் மற்றும் சுருக்கமான செய்தித் தொகுப்புகளின் மூலம் வாசகர்களுக்கு விரைவாகத் தகவல்களை வழங்கும் நோக்கத்துடன் இயங்கி வருகிறது.
Techmeme நீண்ட காலமாகச் சிலிக்கான் வேலியில் பல லட்சம் மக்களுக்கு டெக் துறை செய்திகளுக்கான விருப்ப தேர்வாக இருந்தாலும், சுந்தர் பிச்சையின் பேச்சால் உலக
மைக்ரோசார்ட் சத்ய நாடெல்லா, மெட்டா சிடிஓ ஆண்ட்ரூ போஸ்வொர்த் மற்றும் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற மெட்டா நிர்வாகிகள் எனப் பல மூத்த அதிகாரிகள் Techmeme தளத்தின் வாசகர்களாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications