யூடியூப்பின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியினை சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பதிவியினை 9 ஆண்டுகளாக வகித்து வந்த சூசன் (Susan Wojcicki) உடல் நல பிரச்சனை காரணமாக தனது பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில் தான் யூடியூப்பின் தலைமை விற்பனை அதிகாரியாக இருந்த நீல் மோகன் தற்போது தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
யூடியூப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கூகுளில் 2008ம் ஆண்டு இணைந்த நீல் மோகன், 2015,முதல் உயர் பதவியினை வகித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. தற்போது இந்தியர்களுக்கு மேற்கோண்டு பெருமை சேர்க்கும் விதமாக யூடியூப்பின் தலைமை செயல் அதிகாரியாகவும் உயர்ந்துள்ளார்.
சுந்தர் பிச்சை நன்றி
இதற்கிடையில் ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, சூசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். யூடியூப் தலைவரின் பங்களிப்பை வெளிப்படுத்த இயலாது. அந்தளவுக்கு உயர்ந்ததாக சுட்டிக் காட்டியுள்ளார். கூகுளில் 25 ஆண்டுகளில் பணியாற்றிய பிறகு சூசன் தற்போது தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
புதிய அத்தியாயம்
இது குறித்து சூசன் தனது அறிக்கையில் கிட்டதட்ட கூகுளில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, நான் புதியதொரு அத்தியாயத்தை தொடங்க உள்ளேன். உலகம் முழுக்க உள்ள யூடியூப் படைபாளர்களால் நான் ஒவ்வொரு நாளும் ஈர்க்கப்படுகிறேன். நம்பமுடியாத சமூகத்தின் முன்பு என ஒரு பெரிய இருக்கை கிடைத்தது என மிகப்பெரிய மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது என தனது ராஜினாமா குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளார்.
சுந்தர் பிச்சை ட்வீட்
இது குறித்து சுந்தர் பிச்சை சூசனின் ட்வீட்டினை ஷேர் செய்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டில் அனைத்தையும் வெளிப்படுத்திவிட முடியாது. அவரின் தலைமை நுண்ணறிவு மற்றும் பல ஆண்டு நட்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பதாகவும், தொடர்ந்து எங்களுக்கு ஆலோசனை வழங்குவதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நீலின் பங்கு
கடந்த 2015ம் ஆண்டு யூடியூப்பில் தலைமை புராடெக்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நீல் மோகன், தற்போது படிப்படியாக வளர்ச்சி க்ண்டு, தலைமை செயல் அதிகாரி பதவிக்கு முன்னேறியுள்ளார். நீல்க்கு யூடியூப் டிவி, யூடியூப் மியூசிக், யூடியூப் பிரீமியம், ஷார்ட்ஸ் என பலவற்றில் முக்கிய பங்கு உண்டு.
சரியான தலைவர் தான்
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நீல் கூகுளில் இணைந்த பிறகு, அவரை முக்கிய தலைவர் பதவிக்கு கொண்டு வருவது சூசனின் முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அந்தளவுக்கு அற்புதமான திறமை வாய்ந்தவராக நீல் இருந்துள்ளார்.
சூசன் தனது பதவியினை விட்டு விலகினாலம், நீலுக்கு ஆதரவாக நிற்பதாகவும், மாற்றத்திற்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளார். மேலும் நீல் சரியான தலைவர் என்றும் கூறியுளார்.
பெண்களுக்கு ஆதரவு
சூசன் தான் தொடர்ந்து டெக் துறையில் பெண்களுக்கு ஆதராவாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து தொழிலில் முதலீடு செய்வதுடன் பெண்களை வைத்து அவற்றை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மொத்ததில் யூடியூப்பில் இருந்து வெளியேறினாலும் தொடர்ந்து டெக் துறையில் இருப்பதை இதன் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications