உலகமே இதைத் தான் தேடுது.. சுந்தர் பிச்சை போட்ட சூப்பர் ட்வீட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான ஆல்பாபெட் மற்றும் கூகுள்-ன் சிஇஓ-வான சுந்தர் பிச்சை திங்கட்கிழமை டிவிட்டரில் கலக்கலான ஒரு விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.

கூகுள் தேடுதல் தளம் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக ட்ராஃபிக்கை FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது பதிவு செய்ததாகக் கூறினார். சுந்தர் கிரிக்கெட் ரசிகர் என்றாலும் புட்பால்-ஐ தான் அதிகம் விரும்பும் விளையாட்டு எனப் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு உலகம் முழுவதும் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்த நிலையில் கூகுள் தேடுதல் தளம் வரலாறு சாதனை படைத்துள்ளது.

சென்னை டெக் நிறுவனம் பணிநீக்கம்.. 2% ஊழியர்கள் வெளியேற்றம்..!சென்னை டெக் நிறுவனம் பணிநீக்கம்.. 2% ஊழியர்கள் வெளியேற்றம்..!

FIFA உலகக் கோப்பை

FIFA உலகக் கோப்பை


FIFA உலகக் கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என அர்ஜென்டினா அணி தலைவர் லியோனல் மெஸ்ஸியின் கனவு ஞாயிற்றுக்கிழமை நனவாகியது, ஆனால் இந்தப் போட்டியை மிகவும் கடுமையாக்கியது பிரான்ஸ் அணி. 90 நிமிடத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல் அடித்தது, நீட்டிக்கப்பட்ட 30 நிமிடத்தின் முடிவில் 3-3 கோல் அடித்தனர்.

விறு விறுப்பான ஆட்டம்

விறு விறுப்பான ஆட்டம்

அர்ஜென்டினா சில பதட்டமான தருணங்களில் தப்பிப்பிழைத்து 4-2 பெனால்டி ஷூட் அவுட்டில் நடப்பு சாம்பியனான பிரான்சுக்கு எதிராகப் போராடி வெற்றியைப் பதிவு செய்தது. 2022 FIFA உலகக் கோப்பையை வென்ற பிறகு, அர்ஜென்டினா அணி வீரர்கள் லியோனல் மெஸ்ஸி -யை தோளில் தூக்கி கொண்டாடினர்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

இந்த விறுவிறுப்பான போட்டியின் எதிரொலியாகக் கூகுள் தளத்தில் கடந்த 25 வருடத்தில் கண்டிராத வகையில் அதிகப்படியான சர்ச் ரெக்வஸ்ட் வந்துள்ளதாகக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார். இதன் மூலம் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் FIFA உலகக் கோப்பை குறித்துத் தேடியுள்ளனர் எனச் சுந்தர் பிச்சை தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 அர்ஜென்டினா - பிரான்ஸ் போட்டி

அர்ஜென்டினா - பிரான்ஸ் போட்டி

இதைத் தொடர்ந்து FIFA உலகக் கோப்பையில் மிகவும் சிறந்த போட்டிகளில் ஒன்றாக அர்ஜென்டினா- பிரான்ஸ் மத்தியிலான இறுதி போட்டி இருந்தது. ஜோகோ போனிட்டோ. மெஸ்ஸியை விட யாரும் இந்தக் கோப்பைக்குத் தகுதியானவர் அல்ல இது என்னுடைய தாழ்மையான கருத்து என மற்றொரு ட்வீட்டில் தெரிவித்தார்.

கூகிள் சர்ச் இன்ஜின்

கூகிள் சர்ச் இன்ஜின்

1998 இல் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் இணைந்து உருவாக்கி கூகுள் சர்ச் இன்ஜின் 2022 ஆம் ஆண்டில் 90 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்குடன் உலகின் மிகப்பெரிய இணையத் தேடுதல் தளமாக உள்ளது. சர்ச் இன்ஜின் பல நிறுவனங்கள் இருந்தாலும் கூகுள் தேடல் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் மோனோபோலியாக உள்ளது.

Lex Fridma பதில்

Lex Fridma பதில்

 

Lex Fridman Podcast இன் தொகுப்பாளரும், அமெரிக்காவில் உள்ள Massachusetts Institute of Technology (MIT) ஆராய்ச்சி விஞ்ஞானியுமான Lex Fridma சுந்தர் பிச்சை ட்வீட்டுக்கு பதிலளித்தார்.

இதில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் புட்பால் மீதான ஆர்வத்தால் ஒன்று கூடினர். இதுதான் கால்பந்தின் சிறந்த விஷயமாகவும் உள்ளது.

 கூகுள் அப்டேட்

கூகுள் அப்டேட்

கூகுள் புட்பால் ரசிகர்களின் உணர்வை புரிந்துகொண்டு FIFA போட்டிகள் குறித்து ரியல் டைம் அப்டேட்களைக் கூகுள் டெலிவரி செய்தது மூலம் அதிகமான வாடிக்கையாளர்களை இப்போட்டியின் ஆரம்பத்தில் இருந்து ஈர்த்து இறுதி போட்டியின் போது உச்சத்தைத் தொட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sundar Pichai tweets Google hits Highest Ever Search in 25 Years on FIFA world Cup Final

Sundar Pichai tweets Google hits Highest Ever Search in 25 Years on FIFA world Cup Final
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X