உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் சர்ச் இன்ஜின் சேவை நிறுவனமான கூகுள் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அனைத்து கூகுள் அலுவலகங்களிலும் 25 ஆண்டு நிறைவை கொண்டாடி வருகின்றனர். கூகுள் நிறுவனம் செப்டம்பர் 4, 1998 ஆம் ஆண்டு லேரி பேஜ், செர்கி பிரின் ஆகிய இரு பிஎச்டி பட்டதாரிகளால் உருவாக்கப்பட்டது.
கூகுள் நிறுவனத்தின் 25 வருட பயணித்தில் சுந்தர் பிச்சையின் பங்கீடு மிகவும் முக்கியமானது, இதேபோல் சுந்தர் பிச்சையின் ப்ரொபஷனல் கரியரிலும் கூகுள் மிகவும் முக்கியமானது. இந்த 25 வருட வெற்றியை கொண்டாடும் வகையில் சந்தர் பிச்சை எதிர்கொண்ட மிகப்பெரிய மாற்றம் குறித்து பேசியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவில் படித்துக்கொண்டு இருந்த போது, என்னுடைய தந்தை முதல் முறையாக ஈமெயில் அட்ரெஸ் பெற்றார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் இனி, வேகமாகவும், குறைந்த செலவில் என்னுடைய குடும்பத்துடன் பேச முடியும் என்று நினைத்தேன். அப்போது போன் செய்து பேசும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் கூறினார்.
என்னுடைய தந்தையின் ஈமெயில் முகவரிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவருடைய பதிலுக்காக 2 நாள் காத்திருந்தேன். இந்த ஈமெயில் பதிலில் Dear Mr. Pichai, email received. All is well என்று இருந்தது என செவ்வாய்க்கிழமை சுந்தர் பிச்சை கூறினார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு என்னுடைய மகன், ஒரு விஷயத்தை பார்த்து உடனே புகைப்படம் எடுத்து அதை தனது நண்பர்கள் உடன் பகிர்ந்து சாட் செய்ததை பார்க்கும் போது. வாழ்க்கையும், தொழில்நுட்பமும் எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என வியந்து பார்த்ததாக சுந்தர் பிச்சை பேசியுள்ளார்.
கூகுள் நிறுவனம் துவங்கும் போது வெறும் சர்ச் இன்ஜினாக மட்டுமே துவங்கியது, ஆனால் இப்போது 15க்கும் அதிகமான கூகுள் ப்ராடெக்ட்கள் உள்ளது. ஒவ்வொன்றும் சுமார் 500 பில்லியன் மக்களுக்கும், வர்த்தகங்களுக்கும் சேவை அளிக்கிறது.
ஜிமெயில், கூகுள் மேப்ஸ், கூகுள் கிளவுட், குரோம், யூடியூப், கூகுள் வொர்க்ஸ்பேஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளம், கிளவுட் ஸ்டோரேஜ் டிரைவ், கூகுள் டிரான்ஸ்லேட், வீடியோ சாட் ஆப் MEET, பிக்சல் ஸ்மார்ட்போன்கள், கூகுள் அசிஸ்டண்ட், பார்ட் ஏஐ மற்றும் பல சேவைகளில் கூகுள அசைக்க முடியாத இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications