உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது வேலை செலவுகளை குறைக்கவும், லாபத்தை வானுயர உயர்த்தவும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகின்றன. இந்த கடுமையான போட்டி மற்றும் அசுர வேகமான வளர்ச்சியை கூர்ந்து கவனித்து வரும் கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்ஃபபெட்டின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, தற்போது AI சந்தையில் ஒரு விதமான உண்மையில்லாத வேகம் (Irrationality) இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சுந்தர் பிச்சையின் முயற்சியின் காரணமாக, கூகுளின் 'ஜெமினி' போன்ற AI தயாரிப்புகளில் முதலீடு செய்யப்பட்டதால், கடந்த 7 மாதங்களில் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இரட்டிப்பானது. இருப்பினும், இந்த வேகமான வளர்ச்சியானது, செயற்கையான ஒரு AI Bubble என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒருவேளை, இந்த AI Bubble வெடித்தால் கூகுள் தாக்குப்பிடிக்குமா என்று சுந்தர் பிச்சையிடம் கேட்டபோது, அவர் எச்சரிக்கை கலந்த தொனியில் பதிலளித்தார். "நாங்கள் உட்பட எந்த நிறுவனமும் இந்தச் சூழ்நிலையில் இருந்து விதிவிலக்காக இருக்கப் போவதில்லை." இதன் மூலம், சந்தை சரிந்தால் பெரிய நிறுவனங்கள் கூட கஷ்டப்படும் என்பதை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
கடந்த காலத்தின் பாடம் : இந்த சூழ்நிலையை கடந்த 2000-ஆம் ஆண்டில் பல இணைய நிறுவனங்களின் மதிப்புகள் சரிந்தது குறித்து கூறிய அவர், இணையத்தின் ஆரம்ப காலத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அப்போது முதலீடுகள் அதிகமாக இருந்தன. ஆனால், இணையம் உலகத்தை மாற்றியது என்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது" என்று கூறியுள்ளார்.
AI-யும் அப்படித்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே, இப்போது நடப்பது ஒருபுறம் சரியானதாகவும் மறுபுறம் சில சமயங்களில் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து சாம் ஆல்ட்மேன் (OpenAI சி.இ.ஓ.) கூறுகையில், "இந்த AI Bubble பற்றிய கதைகளை எழுத பலரும் ஆவலாக உள்ளனர். உண்மை என்னவென்றால், AI தொழில்நுட்பத்தின் சில பகுதிகள் இப்போது ஒரு குமிழி போலத்தான் இருக்கின்றன" என்று அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.
அதேபோல், ஜெஃப் பெசோஸ் (அமேசான் நிறுவனர்) கூறுகையில், வங்கிகள் தொடர்பான மிகவும் குமிழி மோசமானது, அதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், தொழில் வளர்ச்சி தொடர்பான குமிழிகள் அவ்வளவு மோசமானவை அல்ல. இவை சமுதாயத்திற்கு நன்மையைக் கூட செய்யும். ஏனெனில், குழப்பங்கள் விலகிய பின் யார் வெற்றியாளர்கள் என்று தெரிய வரும்போது, அந்தப் புதிய கண்டுபிடிப்புகளால் சமூகம் பெரிய அளவில் பலன் அடையும்" என்று தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான யூகங்களால் ஒரு பொருளின் அல்லது நிறுவனத்தின் உண்மையான மதிப்பைவிடப் பங்கு மதிப்பு அதிகரிக்கும்போது அது 'குமிழி' எனப்படுகிறது. சுந்தர் பிச்சையின் இந்த வெளிப்படையான கருத்துகள், AI துறையில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications