உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுள் தனது இணைய உலகில் தற்போது முக்கிய விவாத பொருளாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு துறையில் எப்படியாவது OpenAI நிறுவனத்தின் ஆதிக்கத்தை முறியடித்து முன்னேற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
ChatGPT-க்கு போட்டியாகக் கூகுள் Bard அறிமுகம் செய்தாலும் இதன் ஆதிக்கத்தைத் தகர்க்க முடியவில்லை, இப்படியிருக்கும் சூழ்நிலையில் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் தற்போது AI துறையில் போட்டியை விரிவுபடுத்த மருத்துவத் துறையில் AI பயன்பாட்டைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதற்காக மெடிக்கல் ஏஐ சேட்பாட் ஆன Med-PaLM 2 என்ற தொழில்நுட்பத்தை மருத்துவமனையில் ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது, இந்த சோதனையில் புகழ்பெற்ற Mayo Clinic research மருத்துவமனையும் அடக்கம். கூகுள் ஏஐ துறையில் நீண்ட காலமாக பணியாற்றினாலும், ஏஐ சேட்பாட் துறையில் ஏப்ரல் மாதம் முதல் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் மருத்துவத் துறைக்காக Med-PaLM 2 என்ற மெடிக்கல் ஏஐ சேட்பாட் தொழில்நுட்பத்தைக் கட்டமைத்து சோதனை செய்து வருகிறது கூகுள். இந்த மெடிக்கல் ஏஐ சேட்பாட் மருத்துவம் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது, மேலும் கூகுள் பல்வேறு மருத்துவம் சார்ந்த செயல்முறைகள் குறித்து ஆழ்ந்த புரிதலையும், கற்றலையும் கொண்டு உள்ளது.
இந்த மெடிக்கல் ஏஐ சேட்பாட் சேவை மருத்துவ சேவைகளை எளிதாகப் பெற முடியாத மக்களுக்கும், அதிகப் பணத்தைக் கொடுத்து ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்குச் செல்லும் நிதிநிலையில் இல்லாத மக்களுக்குப் பெரிய அளவில் பயன்படும் எனக் கூறப்படுகிறது. கூகுள் மே மாதம் வெளியிட்ட அறிக்கையில் இந்த மருத்துவ ஏஐ சேட்பாட் சேவையில் சில துல்லியமான பதில் கிடைப்பதில் சில பிரச்சனைகள் இருப்பதாகத் தெரிவித்தது.
மேலும் பல மருத்துவர்கள் இந்த மெடிக்கல் ஏஐ சேட்பாட் சேவையில் பல பிரச்சனைகள் இருப்பதாக மே மாதம் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது கூகுள் முக்கிய மருத்துவமனையில் சோதனைகளைத் துவங்கியுள்ளது. இது எந்த அளவுக்குப் பயனளிக்கும், இது யாருக்கெல்லாம் பாதிப்பு..?
தற்போது இருக்கும் மருத்துவமனை கட்டமைப்பில் அதிகப்படியான நேரம் செலவிடும் பகுதி என்றால் ஆரம்பக்கட்டத்தில் தான். அதாவது மருத்துவமனைக்கும் ஒரு நோயாளி வரும் வேளையில் அவருக்கு என்ன பிரச்சனை என்பதை கண்டுப்பிடித்து அதற்கான பரிசோதனை செய்வதில் தான் அதிகப்படியான நேரமும், மருத்துவர்களும் பணியாற்றுகின்றனர்.
இத்தகைய மெடிக்கல் ஏஐ சேட்பாட் மூலம் ஒரு மருத்துவமனை ஆரம்பக்கட்ட சோதனை செய்து, அதை ஒரு மருத்துவர் சரியா என்பதை நேரில் கண்டு உறுதி செய்தால் போதும் அடுத்தகட்ட பரிசோதனைகளுக்குச் செல்ல முடியும்.
இதன் மூலம் மருத்துவ சேவை மேம்படுத்தும் என பலர் நம்புகின்றனர், அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு போதுமான மருத்துவர்கள் இல்லாத நாடுகளில் இதுபோன்ற சேவைகள் பெரிய அளவில் பலன் தரும். இதில் பல பிரச்சனைகள் இருக்கும் என்பதை ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் கூகுள் இதனை எப்படி மேம்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறது என்பது தான் சவால்.
கூகுள் உருவாக்கும் மெடிக்கல் ஏஐ சேட்பாட் உண்மையிலேயே பெரிய அளவில் பலன் அளித்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் மருத்துவர்களின் தேவை குறையும். ஆனால் ஒவ்வொரு மருத்துவத் துறையில் வல்லுநர்களுக்கான தேவை அதிகரிக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications