2வது முறையாக வட்டியை உயர்த்திய சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: எத்தனை சதவிகிதம் தெரியுமா?

சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக மீண்டும் டெபாசிட் தொகைகளுக்கு வட்டியை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக வட்டி விகிதத்தை சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெபாசிட்களுக்கு வட்டி

டெபாசிட்களுக்கு வட்டி

சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பிக்சட் டெபாசிட் தொகைகளுக்கான வட்டியை உயர்த்தி உள்ளன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தனியார் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளரின் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.

சுந்தரம் ஹோம் பைனான்ஸ்

சுந்தரம் ஹோம் பைனான்ஸ்

இந்த நிலையில் சமீபத்தில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் உயர்த்தியுள்ளது.

4-5 ஆண்டுகள்

4-5 ஆண்டுகள்

4 மற்றும் 5 ஆண்டு வைப்பு தொகைக்கு இதற்கு முன்னர் 6.55 சதவீத வட்டி மட்டும் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது மூத்த குடிமக்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு 7.50% வட்டியும் மற்ற தனிநபர்களுக்கு 7 சதவீதமும் வட்டியும் வழங்கப்படுவதாக சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு வருடம்

ஒரு வருடம்

அதேபோல் ஒரு வருடத்திற்கு தனிநபர்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு 6 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீத வட்டியும் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தனிநபர்கள் வரும் அறக்கட்டளைக்கு 5.5% மூத்த குடிமக்களுக்கு 6% வட்டியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

24 மாதங்கள்

24 மாதங்கள்

24 மாதங்கள் டெபாசிட்டுகளுக்கு தனிநபர்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு 6.30% வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 6.80 சதவீதம் வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வழங்கப்பட்ட வட்டி தொகையை விட 0.50 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

3ஆண்டுகள்

3ஆண்டுகள்

சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் வைப்புத்தொகை டெபாசிட்டுகளுகு மூத்த குடிமக்கள் மற்றும் அறக்கட்டளைக்கு 7.15 சதவீதமும் தனி நபர்களுக்கு 6.55 சதவிகிதமும் வட்டி வழங்கப்படும். இதற்கு முன்னர் மூத்த குடிமக்களுக்கு 6.55% சதவீதமும் தனி நபர்களுக்கு 6.00 சதவீதமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டெபாசிட்டுக்கள் உயரும்

டெபாசிட்டுக்கள் உயரும்

இந்தநிலையில் சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் லக்ஷ்மிநாராயணன் துரைசாமி அவர்கள் இது குறித்து கூறிய போது, 'எங்கள் நிறுவனத்தின் டெபாசிட்டுக்கு இரண்டாவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் மாதம் வட்டியை உயர்த்தியபோது, எங்கள் நிறுவனத்திற்கு அதிகமான அளவில் டெபாசிட்டுக்களை பெற்றோம். அதேபோல் ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் மேலும் அதிக அளவு டெபாசிட்டுக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

ரூ.160 கோடி லாபம்

ரூ.160 கோடி லாபம்

2022 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு அறிக்கையின்படி சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் டெபாசிட்கள் மொத்தம் 1,947 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் இந்நிறுவனம் 160 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+