மும்பை பங்குச் சந்தையின் புதிய தலைவர் சுந்தரராமன் ராமமூர்த்தி.. யார் இவர்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச் சந்தையின் (பிஎஸ்இ) புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (MD & CEO) 62 வயதான சுந்தரராமன் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்பு இப்பதவியில் இருந்து ஆஷிஷ் சவுகான் விலகிய நிலையில் சுந்தரராமன் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செமி) சுந்தரராமன் ராமமூர்த்தி-ஐ மும்பை பங்குச் சந்தையின் (பிஎஸ்இ) புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாகியாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் புதிய தலைவர் சுந்தரராமன் ராமமூர்த்தி.. யார் இவர்..?

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் சேர்வதற்காகப் பிஎஸ்இ உயர் பதவியில் இருந்த ஆஷிஷ் சவுகான் விலகிய நிலையில், ஐந்து மாதங்களுக்குப் பிறகு சுந்தரராமன் ராமமூர்த்தி-ஐ இப்பதவியில் நியமிக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

ஜூலை மாத இறுதியில் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-இன் MD & CEO ஆக ஆஷிஷ் சவுகான் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தொடர் தேடுதல் மற்றும் முடிவுகளுக்குக் கீழ் தற்போது சுந்தரராமன் ராமமூர்த்தி நியமிக்கப்பட ஒப்புதல் கிடைத்துள்ளது.

சுந்தரராமன் ராமமூர்த்தி இதற்கு முன்பு தேசிய பங்குச்சந்தையின் உயர் துணை தலைவராக இருந்தார். இது மட்டும் அல்லாமல் பாங்க் ஆப் அமெரிக்கா-வின் இந்திய பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். தற்போது மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

தற்போது மும்பை பங்குச் சந்தையின் சேர்மன் ஆக இருப்பது எஸ்எஸ் முந்திரா. பிஎஸ்இ-யின் நிர்வாகக் குழுவில் 6 பேர் உள்ளானர், இதில் சுந்தரராமன் ராமமூர்த்தி-யும் அடக்கம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sundararaman Ramamurthy appointed as MD & CEO of BSE; Sebi approves

Sundararaman Ramamurthy appointed as MD & CEO of BSE; Sebi approves appointment after Ashish Chauhan left this post in july
Story first published: Tuesday, November 29, 2022, 13:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X