ஜீரோ கமிஷன் வசூலிக்கும் ஃபுட் டெலிவரி ஆப்.. உணவகங்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் கமிஷன் பெறாத உணவு விநியோக அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "WAAYU" என்று சொல்லப்படுகிற இந்த அப்ளிகேஷன் பொதுவாக பிற உணவு விநியோக தலங்கள் வசூலிக்கும் கமிஷன் தொகையை நீக்கி உள்ளூர் விற்பனையாளர்களுக்கு லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது உணவகங்கள் மற்றும் நுகர்வோர் என இருவருக்குமே பயனளிக்கும் விதமாக இருக்கிறது உள்ளூர் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்ட வெளியீட்டு நிகழ்வில் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவை தெரிவித்தனர்.

பொதுவாக ஆன்லைன் உணவு விநியோகத் தலங்கள் ஒவ்வொரு ஆர்டருக்கும் குறிப்பிட்ட சதவீத தொகையை கமிஷனாக வசூலிக்கும். அதாவது உணவகம், உணவை வழங்கும் தொகையில் ஒரு பகுதியை செலுத்த வேண்டி இருக்கும். WAAYU போன்ற ஜீரோ கமிஷன் தளங்களை பயன்படுத்துவதன் மூலம் உணவகங்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்த அப்ளிகேஷனுக்கு பாலிவுட் பிரபலமான சுனில் ஷெட்டியும் முதலீடு செய்திருக்கிறார்.

 ஜீரோ கமிஷன் வசூலிக்கும் ஃபுட் டெலிவரி ஆப்.. உணவகங்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

WAAYU என்ற ஜீரோ கமிஷன் ஆப், ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் காமர்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் டிஜிட்டல் வர்த்தக இலக்குகளை மேம்படுத்தவும், சிறு வணிகங்களை வளர்க்கவும், உணவகத் தொழிலுக்கு லாபகரமான மாதிரியை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் சுமார் 3,000 செயலில் உள்ள உணவகங்களுடன் கூட்டு சேர WAAYU திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கமிஷன் கட்டணம் இல்லாமல் ஆர்டர்களை வழங்க முடியும். இந்த அப்ளிகேஷன் மூலம் உணவகங்கள் தங்களுடைய வருவாயை அதிகரித்துக் கொள்ளலாம். மேலும் நுகர்வோருக்கும் போட்டி விலையில் உணவுகளை வழங்க முடியும்.

WAAYU-இன் CEO மற்றும் இணை நிறுவனரான, மந்தார் லண்டே வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்கள் என இருவருக்கும் பயனளிக்கும் அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று கூறியுள்ளார்.

WAAYU அப்ளிகேஷன் புனே, மும்பை, பெங்களூர், ஜெய்ப்பூர் போன்ற இடங்களிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மலிவு விலையில் உணவை ஆர்டர் செய்யவும் உணவைப் பெறவும் அனுமதிப்பதால் இந்த நகரங்களில் மக்கள் WAAYU அப்ளிகேஷனுக்கு வரவேற்பு வழங்கி வருகின்றனர். WAAYU மூலம் இந்தியாவின் உணவு விநியோக சந்தையில் ஒரு புதிய போட்டி தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் WAAYU தொடங்கப்பட்டிருப்பது இந்தியாவின் உணவு விநியோகத் தொழிலை மாற்றியமைப்பதில் ஒரு முக்கியமான படியாகும். WAAYU உள்ளூர் உணவகங்களுக்கும், நுகர்வோருக்கும் செலவைக் குறைக்கும் வசதியை வழங்குகிறது. மேலும் தொடர்ந்து இந்த அப்ளிகேஷன் விரிவடைந்து வருவதால் இந்தியாவின் உணவு விநியோகத்தை முற்றிலுமாக இவை மாற்றி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. மக்கள் எந்த அளவுக்கு இந்த அப்ளிகேஷனுக்கு வரவேற்பு அளிக்கின்றனர், உணவகங்களுக்கு ஏற்றபடி இந்த அப்ளிகேஷன் உள்ளதா? என்ற விவரங்கள் படிப்படியாக தெரியவரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+