இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான சுனில் மிட்டல், சீனாவைச் சேர்ந்த ஹையர் ஸ்மார்ட் ஹோம் நிறுவனத்தின் இந்திய பிரிவில் 49% பங்குகளை வாங்குவதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் சுனில் மிட்டல் மற்றும் சீனாவின் Haier மத்தியிலான பேச்சுவார்ச்தை வெற்றிகரமாக முடிந்தால் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலராக இருக்கும் என தெரிகிறது. இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில் இச்சந்தையைப் பிடிக்க Haier போராடி வருகிறது.

ஆனால் சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை மத்திய அரசு தொடர்ந்து தடுத்து வரும் காரணத்தால் இந்திய நிறுவனத்துடன் இணைந்து கூட்டணி நிறுவனமாக மாற முடிவு செய்துள்ளது. இதற்காக சீனாவின் Haier தனது இந்திய வர்த்தகத்தில் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பங்குகளை கைப்பற்றவே தற்போது ஏர்டெல் உரிமையார் சுனில் மிட்டல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனரான சுனில் மிட்டல், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனமான வார்பர்க் பின்கஸ் உடன் இணைந்து, ஹையர் அப்ளையன்ஸஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இந்த பங்குகளை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் உறுதியாகி, மத்திய அரசிடம் தேவையான அனுமதிகளைப் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஹையர் நிறுவனம் பங்குகளை விற்காமல் இருக்கவோ அல்லது வேறு நிறுவனத்தையோ தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
ஹையர் நிறுவனம் கடந்த சில வருடத்தில் தெற்காசியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 29 அறிக்கையின்படி, இந்நிறுவனத்தின் வருவாய், 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கடந்த ஆண்டை விட 30% அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் ஹையரின் சைட்-பை-சைட் பிரிட்ஜ் பிரிவில் 21% சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன. இது இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவையை அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, சுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 28 பில்லியன் டாலராகும். இந்த பேச்சுவார்த்தை குறித்து சுனில் மிட்டல் மற்றும் வார்பர்க் பின்கஸ் நிறுவனம் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஹையர் நிறுவனமும் சைலெண்ட் ஆக உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications