சுனிதா வில்லியம்ஸ் ரிட்டர்ன்ஸ் LIVE: புன்னகையுடன் விண்கலத்தை விட்டு வெளியே வந்த சுனிதா..!
விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருந்த நாசா விண்வெளி வீரர்கள் பேரி வில்மோர் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் நீண்ட காத்திருப்புக்கு பிறகு பூமிக்கு திரும்ப தங்களுடைய பயணத்தை தொடங்கியுள்ளது.
எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கிய கேப்சூலில் இன்று (மார்ச் 18, 2025) அதிகாலை அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டனர். 8 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்ற இவர்கள் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9 மாதங்களாக விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இன்று அதிகாலை ஸ்டார்லிங்க் கேப்சூல் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது. இந்த நிலை வானிலை ஒத்துழைத்தால், இன்று மாலைக்குள் ஃப்ளோரிடா கடற்கரையில் கேப்சூல் கடலில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரரும், ரஷ்ய விண்வெளி வீரரும் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புகின்றனர். இந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பினரும் சந்தித்த வீடியோ பல கோடி மக்கள் பார்த்து ரசித்தனர்.
Mar 19, 2025, 10:07 am IST
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் அதிக நேரம் செலவழித்த இரண்டாவது விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் மொத்தம் 606 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.
Mar 19, 2025, 9:59 am IST
சுனிதா வில்லியம்ஸ்-ன் சொந்த ஊரில் மக்கள் பட்டாசு வெடித்து அவரின் வருகையை கொண்டாடினர்.
Mar 19, 2025, 9:57 am IST
பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் புன்னகைத்து கையசைத்தார்.
Mar 19, 2025, 9:55 am IST
ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியதற்கு எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Mar 19, 2025, 9:55 am IST
நாசாவின் க்ரூ 9 குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் மகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பிற விண்வெளி வீரர்கள், விண்வெளியில் புதிய வரலாற்றை எழுதியுள்ளனர் என்று ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சுனிதா வில்லியம்ஸின் சாதனையை இந்தியாவே கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது.
Mar 19, 2025, 9:54 am IST
விண்வெளி வீரர்கள் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் உடல் வலிமை பெற்றதும் வெள்ளை மாளிகைக்குச் வருவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
Mar 19, 2025, 3:33 am IST
4 விண்வெளி வீரர்களையும் அழைத்து வர கப்பல் செல்கிறது
Mar 19, 2025, 3:30 am IST
டிராகன் விண்கலம் வெற்றிகரமாக கடலில் தரையிறங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Mar 19, 2025, 3:13 am IST
லைவ் வீடியோ
Mar 19, 2025, 3:11 am IST
34 நிமிடம்
Mar 19, 2025, 3:11 am IST
நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பயணித்த டிராகன் விண்கலம், புளோரிடா கடற்கரையில் கடலில் தரையிறங்குவதற்கு முன்பு, அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் முக்கிய டீஆர்பிட் பர்ன் (deorbit burn) நடவடிக்கையை "வெற்றிகரமாக" முடித்தது. இந்த செயல்பாடு, விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் பாதுகாப்பாக நுழைவதற்கு அவசியமானதாகும்.
Mar 19, 2025, 3:08 am IST
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூக்கு கூம்பை (nose cone) மூடியுள்ளது. இது விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் முன் செய்ய வேண்டிய முக்கியமான செயல்முறையாகும். இந்த மூக்கு கூம்பு மூடல், விண்கலத்தை வளிமண்டல உராய்விலிருந்து பாதுகாக்கும்.
Mar 19, 2025, 3:07 am IST
நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸின் பூமி திரும்புதல் நிகழ்வில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. டிராகன் விண்கலத்தின் சுற்றுப்பாதை நீக்கம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இது பூமிக்குத் திரும்பும் பயணத்தின் முதல் முக்கிய நடவடிக்கையாகும்.
Mar 18, 2025, 8:56 pm IST
மறக்க முடியாத கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா, இந்த ஆண்டு 62 வயதை எட்டியிருப்பார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் அவர். அவரது கல்வித் திறனும், உறுதியான மனப்பான்மையும் 1994 ஆம் ஆண்டில் நாசாவிற்கு அவரை அழைத்துச் சென்றது. 1997 ஆம் ஆண்டிற்குள், வேறு எந்த இந்தியப் பெண்ணும் இதற்கு முன்பு அடையாத ஒன்றை அவர் சாதித்தார் - அவர் ஒரு விண்வெளி வீரரானார்.
கல்பனா சாவ்லா இரண்டு விண்வெளிப் பயணங்களை மேற்கொண்டு வரலாற்றில் தனக்கான ஒரு இடத்தைப் பதிவு செய்தார். அவரது முதல் பயணம், 1997 இல் STS-87, கொலம்பியா ஸ்பேஸ் ஷட்டிலில் இருந்து துவங்கியது. இதில் அவர் மிஷன் நிபுணராகவும், ரோபோ ஹேண்ட் ஆபரேட்டராகவும் பணியாற்றினார். இந்த பயணம் அவரை விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணியாக உயர்த்தியது.
Mar 18, 2025, 8:49 pm IST
நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் ஆகியோர் மார்ச் 19-ஆம் தேதி பூமிக்குத் திரும்ப உள்ளனர். இந்திய நேரப்படி, மார்ச் 19-ஆம் தேதி அதிகாலை 3.27 மணிக்கு இவர்கள் கடலில் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mar 18, 2025, 8:47 pm IST
சுனிதா வில்லியம்ஸின் தந்தை தீபக் பாண்டியா 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். தீபக் பாண்டியா குஜராத் மாநிலம் ஜுலாசன் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.
Mar 18, 2025, 8:46 pm IST
தமிழ்நாடு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் சூனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி ஆகியோரின் பாதுகாப்பான வருகையை வாழ்த்தி வருகின்றனர்.
Mar 18, 2025, 8:46 pm IST
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸை "இந்தியாவின் மகள்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் கழித்த பிறகு, புட்ச் வில்மோர் உடன் அவர் பூமிக்குத் திரும்புவதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
Mar 18, 2025, 6:07 pm IST
நீண்ட காலம் தனிமையில் இருந்ததால் ஏற்படும் மனநல பாதிப்புகளை சமாளிக்க மனநல ஆலோசனை பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ்
வழங்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள், விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பிய பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு உதவுகின்றன.
Mar 18, 2025, 6:07 pm IST
உடற்பயிற்சிகள்:
புவியீர்ப்பு விசையுடன் மீண்டும் பழகவும், தசை வலிமையை மீட்டெடுக்கவும் சிறப்பு உடற்பயிற்சிகள் பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ்-க்கு அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சிகள், விண்வெளி வீரர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Mar 18, 2025, 6:07 pm IST
மருத்துவ பரிசோதனைகள்:
விண்வெளியில் நீண்ட காலம் இருந்ததால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை கண்டறிய விரிவான மருத்துவ பரிசோதனைகள் பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் -க்கு மேற்கொள்ளப்படுகின்றன. எலும்பு அடர்த்தி குறைவு, தசை இழப்பு மற்றும் இதய மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் கண்காணிக்கப்படுகின்றன.
Mar 18, 2025, 6:06 pm IST
விண்வெளியிலிருந்து திரும்பும் பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர், புவியீர்ப்பு விசையுடன் மீண்டும் பழகுவதற்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் உடற்பயிற்சிகள் உட்பட கடுமையான மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
Mar 18, 2025, 6:05 pm IST
நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸின் சொந்த கிராமமான குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜுலாசன் கிராம மக்கள், அவரது வருகையை புதன்கிழமை காலை தீபாவளி போன்று பட்டாசு வெடித்து கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
சுனிதா வில்லியம்ஸின் தந்தை தீபக் பாண்டியாவின் சொந்த ஊராக அறியப்படும் ஜுலாசன் கிராமம், உற்சாகத்தில் மூழ்கியுள்ளது. கிராம மக்கள் இவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். பலர் உள்ளூர் டோலா மாதா கோவிலில் சிறப்பு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
Mar 18, 2025, 2:56 pm IST
பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரரும், ரஷ்ய விண்வெளி வீரரும் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புகின்றனர்.
Mar 18, 2025, 2:53 pm IST
நாசா விண்வெளி வீரர்களின் அடிப்படை சம்பளம் ஆண்டுக்கு 125,133 டாலர் முதல் 162,672 டாலர் வரை இருக்கும். வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியில் 9 மாதங்கள் தங்கியிருந்த நிலையில் அவர்களின் வருமானம் ,850 முதல் 2,004 வரை இருக்கும்.
Mar 18, 2025, 2:53 pm IST
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் எலான் மஸ்க் நிறுவிய ஒரு அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஆகும். இது வணிக விண்வெளி பயணங்களின் புதிய மற்றும் மலிவான சகாப்தத்தை உருவாக்கியுள்ளது.
Mar 18, 2025, 2:53 pm IST
சுனிதா வில்லியம்ஸ்
Mar 18, 2025, 2:51 pm IST
வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் முதலில் சுமார் எட்டு நாட்கள் மட்டுமே சர்வதேச விண்வெளி நிலையத்தில் செலவிட திட்டமிட்டிருந்தனர். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் 9 மாதங்கள் கூடுதலாக விண்வெளியில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
Mar 18, 2025, 2:51 pm IST
வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் இன்று காலை ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் 2 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கிளம்பியது மூலம் தங்களுடைய 286 நாட்கள் மற்றும் 7 மணிநேரம் நீடித்த பயணத்தை நிறைவு செய்கின்றனர். அவர்கள் 121 மில்லியன் மைல்கள் பயணித்துள்ளனர்.
Mar 18, 2025, 2:47 pm IST
பேரி புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரின் பூமிக்கு திரும்பும் பயணம் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்ட 17 மணி நேர பணமாகும். இந்த பயணத்தில் டீ-ஆர்பிட், டீசென்ட் மற்றும் ஸ்பிளாஷ்டவுன் (deorbit, descent, and splashdown) உள்ளடக்கியது.
Mar 18, 2025, 2:47 pm IST
நாசாவின் விண்வெளி வீரர்கள் பேரி புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-9 கேப்சூல் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புகின்றனர். அவர்கள் ஃப்ளோரிடாவின் வளைகுடா கடற்கரையில் கடலில் இறங்க உள்ளனர்.
Mar 18, 2025, 2:45 pm IST
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் 2 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்லும் பயணங்களுக்கும், தனியார் விண்வெளி பயணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்கலம் வணிக விண்வெளி பயணங்களின் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது.
Mar 18, 2025, 2:45 pm IST
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் 2 விண்கலம், அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு இயக்கப்படும் இந்த விண்கலம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலம் ஆகும்.
Mar 18, 2025, 2:44 pm IST
நாசா ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், விண்வெளி வீரர்கள் இருவரும் ஃப்ளோரிடா கடற்கரையில் கடலில் இறங்கும் நேரம் இன்று (செவ்வாய்) மாலை 5.57 மணியாக (இந்திய நேரப்படி இரவு 9.27 மணி) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
Mar 18, 2025, 2:37 pm IST
பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சோதனை பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அப்போது போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் உந்துவிசை அமைப்பில் (propulsion issues) கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த விண்கலம் பூமிக்கு திரும்பும் பயணத்திற்கு தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே 9 மாதங்களாக தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
Share This Article
English summary
Sunita Williams Return to Earth After 9 Months in Space LIVE News Updates and NASA Preparations in Tamil
Sunita Williams Returns to Earth [பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்] LIVE News Updates in Tamil: விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்கள் விண்ணில் இருந்து பூமிக்கு திரும்புவது, அவரது குடும்பம் மற்றும் நாசாவின் திட்டங்கள் பற்றி லைவ் நியூஸ் மற்றும் சமீபத்திய செய்திகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பக்கத்தில் இணைந்து இருங்கள்.
Story first published: Tuesday, March 18, 2025, 14:30 [IST]