பிரபல பாலிவுட் நடிகையான கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் போலோ எனப்படும் குதிரை சவாரி விளையாட்டியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மாரடைப்பால் மரணம்: சஞ்சய் கபூர் விளையாட்டு துறையிலும் திரை துறையிலும் மிகவும் பிரபலமான ஒரு நபராக இருக்கிறார். திரைத்துறையில் இவர் பிரபலமாக இருப்பதற்கு காரணம் இவர் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர், விளையாட்டு துறையில் ஒரு பிரபலமாக இருப்பதற்கு காரணம் போலோ எனப்படும் குதிரை சவாரி விளையாட்டில் இவர் கை தேர்ந்தவர் . 53 வயதாக கூடிய சஞ்சய் கபூர் பிரிட்டனில் உயிரிழந்திருக்கிறார்.

தேனீ வாயில் நுழைந்ததால் மாரடைப்பு: இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் நம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இவர் போலோ விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு தேனீ பூச்சி இவருடைய வாயில் நுழைந்து கடித்ததாகவும் இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . உடனடியாக மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது இருந்தாலும் மாரடைப்பு தீவிரமாக ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சோனா குழுமத்தின் தலைவர்: இந்தியாவில் வாகன உபகரணங்களுக்கு பெயர் போன நிறுவனமாக சோனா குழுமம் இருக்கிறது. இந்த சோனா குடும்பத்தை நிறுவியது சஞ்சய் கபூரின் தந்தையான சுரேந்தர் கபூர் தான். சஞ்சய் கபூருக்கு சிறுவயதிலிருந்தே போலோ விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம் . போலோ விளையாட்டை ஒரு புறம் கற்று வந்த அவர் தன்னுடைய தந்தையின் தொழிலையும் மற்றொருபுறம் கவனித்து வந்தார்.
மின்சார வாகன உதிரி பாக நிறுவனம்: கடந்து 2003 ஆம் ஆண்டு சோனா குழுமத்தின் ஒரு இயக்குனராக இவர் வேலைக்கு சேர்ந்தார். இதனை அடுத்து இந்த நிறுவனத்தை சர்வதேச அளவிலான ஒரு பிராண்டாக உயர்த்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் அதில் வெற்றியும் பெற்றார். மின்சார வாகனங்களுக்கு தேவைப்படக்கூடிய உதிரி பாகங்களை தயாரிக்க கூடிய சோனா கான்ஸ்டார் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் தலைவராகவும் சஞ்சய் கபூர் செயல்பட்டு வந்தார்.
போலோ விளையாட்டே உயிர்: மும்பையில் உள்ள ஜான் கெனான் எனப்படும் பல்வேறு பிரபலங்கள் படித்த பள்ளியில் தான் இவர் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து இருக்கிறார். இதனை அடுத்து லண்டன் சென்ற அவர் பிபிஏ பட்டப்படிப்பை முடித்தார். சிறுவயதிலிருந்தே இவருக்கு போலோ எனப்படும் குதிரை சவாரி விளையாட்டின் மீது ஆர்வம் .அந்த வகையில் மிக தீவிரமாக இந்த விளையாட்டை கற்றுக் கொண்டார். சஞ்சய் கபூர் பிரிட்டனில் ஏரியஸ் என்ற பெயரில் ஒரு போலோ குழுவை நடத்தி வந்தார் அதன் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவர் வாழ்க்கையில் எதை விட்டாலும் போலோ விளையாடுவதை மட்டும் இவர் நிறுத்திக் கொள்ளவில்லை அவருடைய மரணமும் போலோ விளையாட்டின் போது ஏற்பட்டிருக்கிறது.
மூன்று முறை திருமணம்: சஞ்சய் கபூரை பொறுத்தவரையில் இவருக்கு மூன்று முறை திருமணம் நடந்துள்ளது. முதலில் இவருக்கு மும்பையை சேர்ந்த பேஷன் டிசைனர் நந்திதாவுடன் திருமணம் நடைபெற்றது. 2000 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்றனர் .2003 ஆம் ஆண்டில் சஞ்சய் கபூர் பிரபல நடிகையான கரிஷ்மா கபூருடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. 2016 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர் . பின்னர் சஞ்சய் கபூர் பிரியா சச்தேவ் என்ற மாடலிங் செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
சஞ்சய் கபூர் மரணத்தால் சரிந்த பங்குகள்: இதனிடையே சஞ்சய் கபூர் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வெளியானதை அடுத்து பங்குச்சந்தையில் அவருக்கு சொந்தமான Sona BLW Precision Forgings Ltd நிறுவனத்தின் பங்கு மதிப்பு 8% வரை சரிந்தது, ஒரு பங்கின் மதிப்பு 467 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் இல்லாத சரிவு இது என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

விஜய் என்னை உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக.. மனைவி சங்கீதா-வின் முக்கிய குற்றச்சாட்டு இதுதான்..!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications