புனே: மகாராஷ்டிராவைச் சேர்ந்த சன்லிட் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் புனேவில் 100 கோடி ரூபாயில் லித்தியம் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. புனே நகரில் மின்சாரத்தில் இயக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு தேவையான பேட்டரிகளை தயாரிக்க போவதாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சன்லிட் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரி, ஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர், லித்தியம் எல்எஃப்பி பேட்டரி ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கிறது.

தற்போது வழக்கத்தைவிட மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சன்லிட் பவர் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பதை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதற்காக புனேவில் அடுத்த இரண்டு ஆண்டுகிளில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழிற்சாலையை தொடங்க போகிறது. இந்த தானியாங்கி பேட்டரி உற்பத்தி ஆலை ( மெஷினே பேட்டரியை தயாரிக்கும் அனைத்து வேலைகளையும் செய்யும்.மனிதர்கள் மிகக்குறைவாகவே தேவைப்படுவார்கள்) அக்டோபர் மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. '
மேலும் சன்லிட் பவர் நிறுவனம் இந்த நிதியாண்டில் கேரளாவின் பல்வேறு இடங்கள், சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகியவற்றில் விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் ஏற்கனவே விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலை பணிகளை ஆட்டோமேசனுக்கு மாற்றுவது சன்லிட் நிறுவனத்தின் நீண்ட கால திட்டங்களில் ஒன்று. இந்த நிறுவனம் உலகின் ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து இரு சக்கர வாகன உற்பத்தியை கவனித்து வருகிறது. அந்த எம்என்சி நிறுவனத்திற்கு பேட்டரிகள் மற்றும் இன்வெர்ட்டர்களை 2025 இல் வெளியிட போகிறதாம்.

சன்லிட் பவர் நிறுவனத்தின் தலைவர் ஷியாம் மனோகர் நாயக் புதிய தொழிற்சாலை குறித்து கூறுகையில், "புனேவில் உள்ள எங்கள் தொழிற்சாலையை ஆட்டோமேசனுக்கு மாற்றுவதற்கே முதலீடு செய்துள்ளோம் இது எங்கள் நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும். இந்த புதிய முயற்சி எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறம். அதே நேரத்தில், நாடு முழுவதும் உள்ள எங்களின் புதிய சேவை மையங்கள் மூலம் அதிக வாடிக்கையாளர்களுக்கு உற்பத்தி செய்யும் பொருட்கள் சென்றடையவும் இந்த புனே தொழிற்சாலை உதவும். எங்கள் நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுமே புனே தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது" என்றார்
இதனிடையே சன்லிட் பவர் நிறுவனத்தின் எம்டி. ஜிதேந்திர பாட்டீல் கூறுகையில், " இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ நகரங்களையும் சேவையை விரிவு படுத்த உள்ளோம். எனவே புதிய ஆலை எங்களுக்கு பெரிய அளவில் வளர்ச்சிக்கு உதவும்" என்றார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications