மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால பட்ஜெட்டில் பலரும் கவனிக்கவும், பாராட்டவும் மறந்த ஒரு அறிவிப்பாக இருக்கும் R&D துறையில் சன்ரைஸ் திட்டத்திற்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்தது தான்.
2025 ஆம் ஆண்டளவில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும் இந்திய அடுத்த 2 வருடத்தில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஈர்க்க சில முக்கியமான துறையை டார்கெட் செய்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் போக்கை மாற்றும் ஆற்றலைக் கொண்ட எலக்ட்ரிக் வாகனங்கள் (EVs), புதுப்பிக்கத்தக்க ஆற்றல், குறைக்கடத்தி என்னும் செமிகண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மற்றும் இன்னும் சில துறை சன்ரைஸ் துறைகளாக மத்திய அரசு அங்கிகரித்துள்ளது.
இந்த சன்ரைஸ் துறைகள் மீது மத்திய அரசு தனிப்பட்ட கவனத்தை ஈர்க்கும் வைக்கும் முடிவில் தான் தற்போது சன்ரைஸ் திட்டத்திற்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்ததுள்ளது.
மத்திய அரசு இந்த 1 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீட்டுச் 50 ஆண்டு வட்டியில்லா கடனை தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட தனியார் நிறுவனங்களுக்கு, நீண்ட காலத் தவணைகள் மற்றும் குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதங்களுடன் நிதியுதவி செய்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு மூலம் பல நிறுவனங்கள் மத்திய அரசு சன்ரைஸ் துறையாக அறிவிக்கப்பட்டு துறைகளில் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் திறமையான இளைஞர்களின் திறனை முழுமையாக பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளமாக இது இருக்கும்.
மேலும் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கீட்டை வகிக்கும் துறையாக பார்க்கப்படுவது EV, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செமிகண்டக்டர் ஆகியவை தான். இந்த 3 துறையில் மட்டும் மத்திய அரசின் திட்டங்கள் சாத்தியமாகும் பட்சத்தில் 5 டிரில்லியன் டார்கெட் எளிதில் எட்ட முடியும்.


Click it and Unblock the Notifications