IPL: சன்ரைஸர்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?!

இன்டர்நெட்டில் 2023 ஏப்ரல் 9 ஆம் தேதியன்று மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டார் காவ்யா மாறன். ஐபிஎல்லின் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர். காவ்யா மாறனை விடாமல் துரத்தி படம் பிடித்த ஒரு கேமராமேனால் கடுப்பான போதும் அமைதி காத்தார். இருப்பினும் இன்டர்நெட்டில் அவர் பரபரப்பாகப் பேசப்பட்டார்.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் சிஇஓ மற்றும் இணை உரிமையாளராக இருக்கும் காவ்யா மாறன் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் மிகவும் பிஸியாகக் காணப்பட்டார்.

IPL: சன்ரைஸர்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?!

தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த காவ்யா மாறன் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்டதன் மூலம் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்களின் மத்தியில் அவரைப் பற்றியப் பேச்சாகத்தான் இருந்தது.

சன் குரூப் தலைவரும் நிறுவனரும் பில்லியனர் மீடியா சக்கரவர்த்தியுமான கலாநிதியின் மகள் தான் காவ்யா மாறன்.
மகளுடன் சேர்ந்து சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளராகவும் கலாநிதி உள்ளார். 2018 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிஇஓ-வாக காவ்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1992 ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று கலாநிதி மாறனுக்கும் காவேரி மாறனுக்கும் மகளாகப் பிறந்தார் காவ்யா மாறன். அவரது தாய் காவேரி மாறன் சோலார் டிவி கம்யூனிட்டி ரெஸ்ட்ரிக்கடின் சிஇஓ-வாக உள்ளார். இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பெண்மணியாக உள்ளார்.

IPL: சன்ரைஸர்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?!

காவ்யா மாறனின் சித்தப்பா தயாநிதி மாறன் மத்திய முன்னாள் அமைச்சர் ஆவார். திமுகவில் முக்கியப் பதவியை வகிக்கிறார்.
காவ்யா மாறனின் தந்தை கலாநிதி மாறன் மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பேரன் ஆவார்.

காவ்யா மாறனின் நிகர சொத்து மதிப்பு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று ஜன் பாரத் டைம்ஸ் தெரிவிக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.409 கோடிகள். கலாநிதி மாறனின் நிகர சொத்து மதிப்பு ரூ.19,000 கோடி என்றும் ஜன் பாரத் டைம்ஸ் கூறியுள்ளது.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் பொறுப்பு தவிர காவ்யா மாறன் பல்வேறு துறைகளிலும் பிஸியாக உள்ளார். சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் பொறுப்புகளையும் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறார்.

சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் காமர்ஸ் டிகிரி பெற்ற காவ்யா மாறன், இங்கிலாந்தில் உள்ள வார்விக் பிஸினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். அவரது பன்முக செயல்பாடுகளுக்கு காவ்யா மாறனின் கல்விப் பின்னணி மிகவும் ஒத்தாசையாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+