இ-காமர்ஸ் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் புதிய சேவையை வழங்க தயாராகி வருகிறது. ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான பின்டெக் நிறுவனமான "சூப்பர் மணி" சூப்பர் FD என்ற பிக்ஸட் டெபாசிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகள், போஸ்ட் ஆபீஸ்கள், சிறு நிதி நிறுவனங்கள் என பலவற்றிலும் பிக்சட் டெபாசிட்கள் வழங்கப்படும் நிலையில் தற்போது சூப்பர் மணி நிறுவனமும் FD திட்டங்களை வழங்கவுள்ளது.
சூப்பர் FD திட்டத்திற்கு UPI மூலமாக எளிதில் பணம் செலுத்தலாம். மேலும் 9.5 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. சூப்பர் FD என்ற திட்டத்தின் மூலம் சூப்பர் மணி தனது 7 மில்லியன் பயனர்களுக்காக முதல்முறையாக முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சூப்பர் FD-இன் அம்சங்கள்: சூப்பர் பிக்சட் டெபாசிட் மூலம் பயனர்கள் 1,000 ரூபாய்க்கும் குறைவான பிக்சட் டெபாசிட்களை பதிவு செய்து 9.5% வரை அதிகபட்ச வட்டி விகிதத்தை பெறலாம். சூப்பர் மணி மூலம் பயணர்கள் ஆர்பிஐ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட 5 வங்கிகளில் இருந்து தேர்வு செய்து டெபாசிட் செய்யலாம். சூப்பர் மணி மூலம் செய்யப்படும் அனைத்து பிக்சர் டெபாசிட்களுக்கும் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் மூலம் ரூ. 5 லட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படுகிறது.
சூப்பர் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?: நிறுவனத்தின் கூற்றுப்படி பயணர்கள் கீழ்காணும் ஸ்டெப்ஸ்களை பயன்படுத்தி சூப்பர் FD கணக்கை பதிவு செய்யலாம்.
ஸ்டெப் 1: முதலில் சூப்பர் மணி என்ற அப்ளிகேஷனை அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: உங்களுக்கு விருப்பமான வங்கி FD-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 3: e-KYC செயல்முறையை முடிக்க வேண்டும்.
ஸ்டெப் 4: பின்னர் நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய இருக்கிறீர்களோ அதை UPI மூலமாக செலுத்தி செயல் முறையை முடிக்க வேண்டும். சூப்பர் FD கணக்கு முற்றிலுமாக டிஜிட்டல் கணக்காகும். எனவே செயல்முறை சிக்கலற்றதாகவும் வேகமானதாகவும் இருக்கும் முழு முழுக்க முழுக்க காகிதமற்ற செயல்முறையாக இருப்பதால் விவரங்களை துல்லியாமாக வழங்க வேண்டும்.
நீண்ட காலமாக பிக்சட் டெபாசிட்கள் மக்கள் மத்தியில் சிறந்த வருமானம் தருவதாக நம்பப்படுகிறது. பிற முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதை விட பிக்சட் டெபாசிட்களையே மக்கள் பெரிதும் நம்புகின்றனர். அதற்கு ஏற்ப போட்டி விகிதங்களில் போஸ்ட் ஆபீஸ்கள் மற்றும் வங்கிகள் பிக்சட் டெபாசிட்களை வழங்கி வந்த நிலையில் தற்போது சூப்பர் மணி பின்டெக் நிறுவனமும் அதில் இணைந்துள்ளது.
அதேபோல செப்டம்பர் மாதம் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் பைனான்ஸ் FD திட்டங்களை வழங்கியது. இதற்கு ஆண்டு வட்டியாக 9.1 சதவீதம் வழங்கப்படுவதாகவும் அறிவித்தது. இதுவும் முழுக்க முழுக்க டிஜிட்டல் நிறுவனம் என்பதால் ஆன்லைனிலேயே பிக்சட் டெபாசிட் செய்ய முடியும். இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குவதற்காக ஏர்டெல் பைனான்ஸ் முக்கிய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC-கள்) மற்றும் சிறு நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. "Airtel Thanks" அப்ளிகேஷன் மூலம் இந்த பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications